|
292
292
உடைஆர்ந்த ஆடையன்
கண்டிகை
யன்உடை நாணினன்
புடையார்பொன் நூலினன்
பொன்முடி
யன்மற்றும்
பல்கலன்
நடையா உடைத்திரு
நாரணன்
தொண்டர்தொண்
டர்கண்டீர்
இடையார் பிறப்பிடை
தோறுஎமக்கு
எம்பெரு மக்களே.
பொ-ரை :
உடுத்திருக்கின்ற
பொருந்திய பொன்னாடையை உடையவன், கழுத்தணியையுடையவன், தரித்த அரை ஞாணினை உடையவன், ஒரு
பக்கமாகப் பொருந்தியிருக்கின்ற பொன்னாலான பூணூலையுடையவன், பொன்னாலான திருமுடியையுடையவன்,
மற்றும், இயற்கையிலேயே பொருந்திய பல ஆபரணங்களையுடையவனான திரு நாராயணனுடைய அடியார்கள் கண்டீர்
இடம் பொருந்திய பிறவிகள்தோறும் எமக்கு எம்முடைய பெருமக்கள் ஆவர்கள்.
வி-கு :
கண்டிகை -
மார்பில் அணியும் ஓர் ஆபரண விசேடம்; கண்டத்தில் அளியப்படுவது கண்டிகை. ‘மற்றும் நடையாவுடைப்
பல்கலன்’ என மாறுக. இடை - இடம்; இதனை, பெயரினிடமாகவும், வினையினிடமாகவும் பிறக்கும் இடச்சொல்லை
‘இடைச்சொல்’ என்பது போலக் கொள்க.
ஈடு :
நாலாம் பாட்டு.
1‘இறைவனுடைய ஆபரண வனப்பிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடியரானவர்கள் எனக்கு
ஸ்வாமிகள்,’ என்கிறார்.
உடை ஆர்ந்த
ஆடையன் - திரு அரை பூத்தது போன்று இருக்கிறபடி. ‘திருஅரை மலர்ந்தது போன்று இருக்கின்ற பட்டாடை’,
2‘பீதாம்பரத்தைத் தரித்திருப்பவர்’ என்பது
___________________________________________________
1. பாசுரம் முழுதினையும்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2.
ஸ்ரீ பாகவதம்.
இச்சுலோகமும், இச்சுலோகத்திற்கு
வியாக்கியாதா
அருளிச்செய்த பொருளும் பின் வருமாறு:
‘தாஸாம் ஆவிரபூத்
சௌரிஸ் ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ
சாக்ஷாத் மந்மத மந்மத:’
‘தாஸாம் ஆவிரபூத்
- ஸ்ரீ பிருந்தாவனத்திலே உலாவாநிற்கச்செய்தே,
அவர்கள் படும் அலமாப்புக் காண்கைக்காக மறைய
நின்றான்; ‘இனி,
இவர்கள் தரிக்கமாட்டார்கள்,’ என்று தோற்றினவாறே வந்து தோற்றினான்.
|