|
ப
பாகவதம்.
கண்டிகையன் -
1‘கூறையுடை அழகு மேலே எழ வீசிப் போகாநிற்க, நடுவே வழி பறித்துக்கொள்ளும் திருக்கழுத்தில்
ஆபரணம், இவரைமடி பிடித்துக்கொண்டு போய்க் கழுத்தளவு வனப்பிலே நிறுத்திற்று’ என்றபடி.
மடி-புடைவை. கண்டிகை-கண்டத்திலே சார்த்துமவை; ஆரம். உடை நாணினன் - அரைநூல் வடத்தை உடையவன்;
கழுத்தே கட்டளையாக அனுபவியாநிற்க, கண்டத்திலேயுள்ள அழகுத்திரைகள் கீழே போர வீச, நடுவே நின்று
அனுபவிக்கிறார். புடையார் பொன் நூலினன் - தான் கிடந்த பக்கத்தில் வேறோர் ஆபரணம் வேண்டாதே,
காளமேகத்திலே மின்னியது போன்று இருக்கின்ற பூணூலையுடையவன். இந்த அழகுக் கடலின் நடுவே அலையப்
புக்கவாறே, தமக்குப் பற்றுக்கோடாக ஒரு 2நூலைப் பற்றினார்காணும்.
பொன் முடியன் -
‘தேர் கடவிய பெருமான்’ என்கிறபடியே, அடியார்கட்கு ஆட்செய்கைக்கு முடி கவித்திருக்கின்றவன்;
பொன் முடி - அழகிய முடி. ஒரு நூலைப் பற்றி நின்றவர்களை அதுதானே ஒருதலை சேர்த்துவிடுகை நிச்சயம்
அன்றோ? மற்றும் பல் கலன் நடையாவுடை - வேறு விதமான திரு ஆபரணங்களையும் இயற்கையாக உடையவன்;
ஒருதலை சேர்ந்தால் பின்னை
____________________________________________________
தாஸாம் - கமர் பிளந்தவிடத்தே
ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே
இருக்கை. ஸ்மயமான முகாம்புஜ: - தன்னையொழியச்
செல்லாமையுண்டானால்,
பின்பு அவன் முகம் இருக்கும்படி இதுபோலே
காணும். பீதாம்பரதர: - இவன்பக்கல் இடைப்பெண்கள் நெஞ்சிற்பிறந்த
பிரணய ரோஷத்தாலுள்ள மறமெல்லாம் ஆறும்படியாயிற்று உடை வாய்ப்பு
இருப்பது; நெஞ்சுகளிற் பிறந்த
புண்களெல்லாம் தீர்ந்து இத்தோடே பணி
போரும்படியாயிற்று இருப்பது. (பணி போருதல் - அந்த
விஷய
விகாரமேயாய்ச் செல்லுதல். அதனை விரிக்கிறார் ‘படிச்சோதி’ என்று
தொடங்கி.)
‘படிச்சோதியாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்,
கடிச்சோதி கலந்ததுவோ?’ என்று இதுவே பணிபோந்திருக்குமிறே.
(‘இங்ஙனம் கவர்ச்சிகரமாயிருப்பது பெண்களுக்குமாத்திரமேயோ?’
என்னில்,) ‘சாக்ஷாத் மந்மத
மந்மத:’, ‘பும்சாம் திருஷ்டி சித்தாபஹாரிணம்’
என்கிறபடியே என்பது.
1. ‘பீதாம்பர
அனுபவத்தை விட்டு வேறு ஆபரணங்களை அனுபவிக்கத்
தொடங்குதல் என்? இதனுடைய அனுபவம் முற்றுப்பெற்றோ?’
எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘கூறையுடை அழகு’ என்று தொடங்கி.
2. ‘நூல்’ என்றது,
சிலேடை: பூணுநூலும், சாஸ்திரமும். சாஸ்திரம் -
வானசாஸ்திரம்.
|