| க 
களை எண்ணாதே இருந்த 
போதும் எமக்கு ஸ்வாமிகளேயாவர் என்பார், ‘எமக்கு 
எம்பெருமக்களே’ 
என்கிறார். ‘எங்களுக்கே 
உரிய தலைவர்கள்’ என்றபடி. 
(4) 
293 
        பெருமக்கள் உள்ள 
வர்தம்பெருமானை அமரர்கட்கு
 அருமை ஒழியஅன்று 
ஆர்அமுது
 ஊட்டிய அப்பனைப்
 பெருமை பிதற்ற வல்லாரைப்
 பிதற்றுமவர் 
கண்டீர்
 வருமையும் இம்மையும் 
நம்மை
 அளிக்கும் 
பிராக்களே.
 
 பொ-ரை : 
பெருமக்களாக உள்ளவர் தங்கட்குப் பெருமானும் தேவர்களுக்கு வருத்தம் இல்லாதபடி அக்காலத்தில் 
அரிய அமுதத்தை உண்பித்த தலைவனுமான எம்பெருமானுடைய பெருமையைக் கூறுகின்ற அடியவர்களுடைய 
பெருமையைப் புகழ்ந்து பேசுகின்ற அடியவர்கள்தாம் இனி வருகின்ற பிறவிகளிலும் இப்பிறவியிலும் 
நம்மைப் பாதுகாக்கும் ஸ்வாமிகள் ஆவார்கள்.
 
 வி-கு : 
பெருமக்களாக உள்ளவர்கள் 
- நித்தியசூரிகள். அருமை ஒழிய என்றது, வருத்தமின்மையைக் காட்ட வந்தது. பிதற்றுதல் - அடைவு 
கெடப் புகழ்தல். வருமை - வருகின்ற பிறவிகள். பிராக்கள் - பிரான்கள்.
 
 ஈடு : 
ஐந்தாம் பாட்டு. 
1‘வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்கட்கும் விரும்புகின்றவற்றைக் கொடுக்கின்ற 
இறைவனுடைய கொடையிலே தோற்றவர்கள் தன்மைக்குத் தோற்றவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.
 
 பெருமக்கள் - நித்தியசூரிகள்; 
‘பெரியோர்’ என்றபடி. 2‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ என்பது அன்றோ மறைமொழி?
3‘மஹாத்துமாக்களோ என்றால்’ என்றும், 4‘என்னையே அடைகின்றவன் மஹாத்மா 
ஆவான்; அவன் கிடைப்பது அரிது,’
 
____________________________________________________  
1. ‘அமரர்கட்கு’ 
என்றது முதல் பாசுரம் முழுதையும் கடாக்ஷித்து, அவதாரிகைஅருளிச்செய்கிறார்.
 
 2.
பெரிய திருமொழி, 7. 4 : 4.
 
 3.
ஸ்ரீ கீதை, 9 : 13.
 
 4.
ஸ்ரீ கீதை, 7 : 19.
 |