| New Page 1 
போகத்திலே சேர்க்கை 
உளதாம்படி பண்ணினான் ஆதலின், 
‘அருமை ஒழிய’ 
என்கிறார்,’ என்னலுமாம். 
அன்று - 1தூர்வாச சாபத்தாலே பீடிக்கப்பட்டு வருந்திய அக்காலத்தில். ஆர் அமுது 
ஊட்டிய அப்பனை - 2வானவரைப் பெண்ணாகி அமுது ஊட்டும் பெருமான் அன்றோ? அப்பன் - 
உபகாரகன். 3குழந்தைகட்குத் தாய் பண்ணும் உபகாரமாவது, அதன் முகம் வாடாமல் வளர்த்தலே 
அன்றோ?
 பெருமை - 4‘உதாரர்கள்’ 
என்கிறபடியே, தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்க்குப் போலே, செல்வம் முதலியவற்றை 
விரும்பியவர்கட்கும் ‘இதனையாகிலும் நம் பக்கல் கொள்ளப்பெற்றோமே! இவர்கள் நமக்குச் சர்வஸ்வதானம் 
பண்ணுகிறார்கள் அன்றோ?’ என்று இருக்கும் பெருமை. 5நாட்டார் படி அல்ல இவனது: நாட்டில் 
கொடுப்பார் உதாரராயிருப்பார்; இங்குக் கொள்வார் உதாரராயிருப்பார். யாதேனுமாகக் குறை தீர்ப்பார் 
உதாரராமித்தனை அன்றோ? பிதற்ற வல்லாரை - 6‘அறவனை’ என்கிறபடியே, ‘வேறு பிரயோஜனங்களை 
விரும்புகிறவர்களிடத்திலும் இப்படியிருப்பதே!’ என்று இதனை நெஞ்சிலே நினைத்து அடைவுகெடக் கூப்பிட்டு 
ஏத்துமவர்களை. பிதற்றுமவர் கண்டீர் - ‘இந்நீர்மை 7இவர்களுக்கு நிலமாவதே!’ என்று
 ____________________________________________________
 
1. இச்சரிதப் பகுதியைக் 
கம்பராமாயணம், பாலகாண்டம், அகலிகைப் படலம், 4முதல் 26 முடிய உள்ள செய்யுள்களில் காணலாகும்.
 
 2. ‘நண்ணாத 
வாளவுண ரிடைப்புக்கு வானவரைப்
 பெண்ணாகி அமுதூட்டும் 
பெருமானார்’
 
 என்பது 
பெரிய திருமொழி, 2. 6 
: 1.
 
 3. ‘வேறு பலன்களைக் 
கொடுப்பது உபகாரம் ஆகுமோ?’ என்ன, அதற்கு
 விடை அருளிச்செய்கிறார், ‘குழந்தைகட்குத் தாய்’ 
என்று தொடங்கி.
 
 4. 
ஸ்ரீ கீதை, 7 : 18.
சர்வஸ்வ தானம் 
- எல்லாவற்றையும் கொடுத்தல்.
 
 5. ‘கொள்ளுகின்றவர்கள் 
உதாரராம்படி என்?’ என்ன, அதற்கு விடை
 அருளிச்செய்கிறார், ‘நாட்டார் படியல்ல’ என்று தொடங்கி,
 ‘கொள்ளுகின்றவர்களிடத்தில் கொடைத்தன்மை ஏது?’ என்ன, அதற்கு
 விடை அருளிச்செய்கிறார், 
‘யாதேனுமாக’ என்று தொடங்கி. உதாரர் -
 வள்ளல்.
 
 6. 
திருவாய். 
1. 7 : 1.
 
 7. ‘இவர்களுக்கு’ என்றது, 
வேறு பலன்களை விரும்புகிறவர்களைக் குறித்தபடி.
 ‘அவர்கள் அவன் பக்கலிலே இருக்கும் இருப்பை’ 
என்றது.
 ‘பிரயோஜநாந்தரபரர்க்கு அதனைக் கொடுத்துவிடுவதே; இது என்ன நீர்மை!’
 என்று அநுசந்தித்துப் 
பிதற்றுதலைக் குறித்தபடி. அவர்கள் - அடியார்கள்.
 |