முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
260

அவர

அவர்கள் அவன்பக்கல் இருக்கும் இருப்பை அவர்கள் பக்கலிலே இருக்குமவர்கள்தாம். ‘இவர்கள் உத்தேசியராவது எத்தனை நாள்களுக்கு?’ என்ன, வருமையும் இம்மையும் - 1‘இவ்வுலகம் மேலுலகம் இரண்டிலும்’ என்கிறபடியே, இவ்வுலகம் மேலுலகம் என்னும் இரண்டிலும். இவ்வுலகத்தில் 2நாட்டாரோடு இயல்வொழித்து, அவ்வுலகத்தில் நாரணனை நண்ணுவித்து, 3அடியார்கள் குழாங்களிலே உடன்கூட்டும் உபகாரகர். நம்மை அளிக்கும் பிராக்கள் - நம்மை உஜ்ஜீவிக்கும் ஸ்வாமிகள். சர்வேசுவரன் ஒரு நாள்வரையிலே தன்னிடத்தில் ஒடுக்கி வைத்து, ஒரு நாள் வரையிலே சமுசாரத்திலே 4தரு துயரம் தடாதே வைப்பான் அன்றோ? ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து வசிக்கப்பெறில் ‘சமுசாரந்தானே நன்று’ என்னும்படி அன்றோ அவர்கள் படி? ஆதலின், ‘அளிக்கும் பிராக்களே’ எனத் தேற்றேகாரங் கொடுத்து ஓதுகிறார். மேலே 5‘நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் உறுமோ?’ என்றாரே அன்றோ?

(5)

294 

        அளிக்கும் பரமனைக் கண்ணனை
           ஆழிப் பிரான்தன்னைத்
       துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி
           வண்ணன்எம் மான்தன்னை
       ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்
           கொள்ளு மவர்கண்டீர்
       சலிப்பின்றி யாண்டுஎம்மைச் சன்மசன்
           மாந்தரம் காப்பரே.

   
பொ-ரை : காப்பாற்றுகின்ற மேலானவனை, கண்ணபிரானை, சக்கரத்தையுடைய உபகாரகனை, தேன் துளிக்கின்ற வாசனையையுடைய திருத்துழாய் மாலையைத் தரித்த பரிசுத்தமான நீலமணி

____________________________________________________ 

1. ஸ்தோத்திர ரத்நம்.
2. திருவாய். 10. 6 : 2.
3. திருவாய். 2. 3 : 10.
4. பெருமாள் திருமொழி, 5 : 1.
5. திருவாய். 8. 10 : 3.