|
295
295
சன்மசன் மாந்தரம்
காத்துஅடி
யார்களைக்
கொண்டுபோய்த்
தன்மை பெறுத்தித்தன்
தாளிணைக்
கீழ்க்கொள்ளும்
அப்பனைத்
தொன்மை பிதற்ற
வல்லாரைப்
பிதற்று மவர்கண்டீர்
நன்மை பெறுத்துஎம்மை
நாள்உய்யக்
கொள்கின்ற நம்பரே.
பொ-ரை : தொடர்ந்து
வருகின்ற பிறவிகளிற்புகாதபடி காத்து அடியார்களை ஒரு தேச விசேஷத்திலே கொண்டு சென்று தனது சொரூபத்தைக்
கொடுத்துத் தன் திருவடிகளின் கீழே அடிமைகொண்டருளும் எந்தையினுடைய இயற்கையான உபகாரத்தை
அடைவு கெடக் கூறும் அடியார்களுடைய புகழை அடைவு கெடக் கூறுகின்றவர்கள்தாம் நன்மையைப் பெறும்படி
செய்து எம்மை எப்பொழுதும் உய்யும்படி கொள்ளுகின்ற நம்பர் ஆவர்.
வி-கு :
‘சன்ம சன்மாந்தரம்
காத்து’ என்ற இடத்துச் சன்மாந்தரங்களில் வாராமற்காத்து என ஒரு சொல்லைக் கொணர்ந்து
பொருள் காண்க. தொன்மை என்றது, இயல்பினை உணர்த்திற்று. ‘பிதற்றுமவர் உய்யக் கொள்கின்ற
நம்பர்,’ என்க. பிதற்றுதல் - பத்தி பாரவசியத்தினால் அடைவு கெடப் பேசுதல். நம்பர் - நம்பப்படுமவர்கள்.
ஈடு :
ஏழாம் பாட்டு. 1‘அடியார்கள்
விஷயத்தில் அவன் செய்யும் மஹோபகாரங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்குத் தோற்றிருக்குமவர்கள்தாம்
எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகள்,’ என்கிறார்.
சன்ம சன்மாந்தரம்
காத்து - 2பஞ்சாக்நி வித்தையிற்சொல்லுகிறபடியே, மேகத்திலே புக்கு மழை உருவத்தாலே
பூமியை
_____________________________________________________
1. பாசுரம் முழுதினையும்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘அடியார்கள் விஷயத்தில்’ என்று தொடங்கி.
2. சாந்தோக்கிய
உபநிடதத்திற்கூறியுள்ள முறையைத் திருவுள்ளம் பற்றிப்
‘பஞ்சாக்நி வித்தையிற்சொல்லுகிறபடியே’
என்றார். பஞ்சாக்நி - ஐந்து
நெருப்புகள். ‘அக்நி’ என்பதும் ‘ஆஹீதி’ என்பதும் ஒரு பொருட்
சொற்கள்
என்பர் அரும்பதவுரைகாரர். ஆகாசம், மேகம், பூமி, ஆண், பெண்
|