| அ 
அடைந்து, நெல்லிலே 
புக்குச் சோற்றின் உருவத்தாலே புருஷன் பக்கலிலே புக்கு, பின்பு, ஐந்தாவதான பெண்ணின் சரீரத்திலே 
புக்கு, பின்பே அன்றோ கர்ப்பமாவது? இப்படி வருகின்ற பிறவியின் தொடர்ச்சியை வேர்ப்பற்றோடே 
அறுத்து. என்றது, ‘இந்தச் சரீரத்தோடு முடிவுசெய்து பின்பு ஒரு சரீரத்திற்புகாதபடி செய்து’ என்றபடி. 
‘இப்படிச் செய்வது யாரை?’ என்னில், அடியார்களை - தன் திருவடிகளில் எல்லாப் பாரங்களையும் 
விட்டிருக்குமவர்களை. கொண்டுபோய்த் தன்மை பெறுத்தித் தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை 
- 1‘மரணமானால்’ என்கிறபடியே, சரீரம் பிரியுமளவும் பொறுத்திருந்து உயிர் உடம்பின் 
நீங்குங் காலத்து நினையும் நினைவையும் பத்தியையும் இவர்களுடைய பணியாக்காமல் 2’அஹம் 
ஸ்மராமி - நானே நினைக்கிறேன்,’ என்கிறபடியே, தானே நினைத்து, வழி தெரியாதபடி இருக்_____________________________________________________
 
 
என்னும் இவ்வைந்துமே இங்குப் 
பஞ்சாக்நிகளாகச் சொல்லப்படுகின்றன.ஒரு சரீரத்தை விட்டு நீங்கிய உயிர், மற்றொரு சரீரத்தை 
அடையும் முறை
 இங்குக் கூறப்படுகின்றது. மேற்கூறிய ஐந்திலும் ஆத்துமா பிரவேசிக்கும்
 முறையாவது: 
ஒரு சரீரத்தினின்றும் பிரிந்த உயிரானது, யாதநா சரீரத்தாலே
 நரக அனுபவம் பண்ணி, அந்தச் 
சரீரத்தை விட்டு, புண்ணிய சரீரத்தை
 எடுத்துச் சுவர்க்க அனுபவம் பண்ணி, பின் கோட்டைக்குப் 
புறத்தே
 ‘த்வம்ச’ என்று தள்ள, அந்தச் சரீரத்தை இராக்கதர்கள் புசிக்க, சூக்ஷ்ம
 சரீரத்தோடே 
பற்றுக்கோடு இல்லாத  
ஆகாசத்திலே விழ, 
சூரியன் தன்
 கிரணத்தாலே 
பனியை இழுத்து அந்த ஈரத்தாலே ஆகாபத்திலே மங்கிக்
 கிடக்கின்ற ஆத்துமாவை எடுத்து 
மேகத்திலே போகட,
அந்தப் பனி
 மேகத்திலே மழை வடிவாக மாறி மழை மூலமாகப் 
பூமியை 
அடைந்து,
 பயிருக்குத் தாரகமான தண்ணீர் 
மூலமாகப் பயிரையடைந்து, அன்னத்தின்
 (சோறு) உருவாக மாறுகிற வரையில் அங்கே கிடந்து, உணவு 
உருவாகப்
 புருஷனையடைந்து, 
சுக்கிலமாக மாறுகின்ற 
வரையில் அங்கே கிடந்து,
 சுக்கிலம் வழியாகப் 
பெண்ணின் சரீரத்தையடைந்து
கருத்தங்கிப்
 புருஷனாகப் பிறத்தல். இதன் கருத்தைப் 
பகவத்கீதை
மூன்றாம்
 அத்தியாயத்தில் 14ஆம் சுலோகத்திலும் காணலாகும்.
 
 1. இவ்வுயிரை வீட்டுலகிற்குக் 
கொண்டு போகின்ற விதத்தை
 வேதாந்தத்திற்கூறியுள்ள முறையிலே காட்டுகிறார், ‘மரணமானால்’ என்று
 தொடங்கி. ‘மரணமானால்’ என்னும் பாசுரம், 
திருவாய். 
9. 10 : 5.
 
 2.
ஸ்ரீ வராக சரமம். ‘பின்னர் 
கட்டையைப் போன்றும் கல்லைப் போன்றும்
 பரதந்திரனாயிருக்கிற என் பத்தனை உயிர் உடலை விட்டு 
நீங்குங்
 காலத்து 
நானே நினைக்கிறேன்; 
மேலான கதியை அடையச்செய்கிறேன்,’
 என்பது அச்சுலோகத்தின் பொருள்,
 |