முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
265

கின்ற நூற்றோராவது நாடியாலே 1‘ஆர்த்தனான பரம புருஷனால் அநுக்கிரஹிக்கப்பட்டவனாய்’ என்கிறபடியே, தான் கூடக் கொண்டு புறப்பட்டு, அச்சரீரத்தின் பிரிவு சமயத்திலே இவன்பட்ட வருத்தமெல்லாம் தீரும்படியாக அவ்வளவிலே ஒரு பரமாத்தும பிரவேசத்தைப் பண்ணுவித்து, சிறு குழந்தைகள் நொந்தால் தாயானவள் குளிர்ந்த உபசாரம் பண்ணுமாறு போன்று அவ்வளவிலே மேல் வழி போகைக்குத் தரிப்பு உண்டாம்படி செய்து, 2’உயிர்கொண்டு உடல் ஒழிய ஓடும்போது ஓடி, அயர்வென்ற தீர்ப்பான்’ என்கிறபடியே, சென்று முகங்கொடுத்து, கர்ம சம்பந்தம் அற்றிருப்பினும் வித்யா மஹாத்மியத்தாலே விரஜையளவும் 3சூக்ஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி, 4அர்ச்சிராதி கணங்களோடு ஒக்க ஆள் இட்டிராமல், ‘நயாமி - அடையச்செய்கி

_____________________________________________________ 

1. சாரீரக மீமாம்ஸை, சூத். 4. 2 : 16.

      ‘பிராட்டியும் ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் இலங்கையினின்றும்
  புறப்பட்டாற்போலே ஹ்ருதய கமலத்தினின்றும் புறப்பட்டு,
  ‘சதஞ்சைகாசஹ்ருதயஸ்ய நாட்ய:’ என்கிறபடியே, ஹ்ருதயத்தைப் பற்றிக்
  கிடக்கிற நூற்றொரு நாடியிலும் ஸீஷீம்நை என்று பேரையுடைத்தான
  மூர்த்தந்ய நாடியாலே வித்யா மகாத்மியத்தாலும் தேவயாநாநுஸ்மிருதியாலும்
  பிரசந்நனான ஹார்த்தன் கைவிளக்குப் பிடித்துக்கொண்டு போகப் போய்ச்
  சிரக்கபாலத்தைப் பேதித்து,’ என்றார் பிள்ளைலோகாசாரியர். (அஷ்டாதச
  ரஹஸ்யம், அர்ச்சிராதி, முதல் பிரகரணம்.)

 
‘நன்னில மாமது நற்பக லாமது நன்னிமித்தம்
   என்னலு மாமது யாதானு மாம்அங் கடியவர்க்கு
   மின்னிலை மேனி விடும்பய ணத்து விலக்கிலதோர்
   நன்னிலை யாம்நடு நாடி வழிக்கு நடைபெறவே.’

 
என்றார் ஸ்ரீநிகமாந்த தேசிகன்,

(அதிகார சங். 27.) 

      பகவத் கீதை, எட்டாம் அத்தியாயம், 22 முதல் 27 முடிய உள்ள
  சுலோகங்களிலும் இவ்வர்ச்சிராதி மார்க்கம் கூறப்பட்டுள்ளமை காணலாகும்.

2. நான்முகன் திருவந். 88.

3. சூக்ஷ்மசரீரம் - பந்து வகை இந்திரியவுணர்வோடும் ஐவகை
  வாயுக்களோடும் கர்ம வினை விளைவுகளோடும் கூடிய மனம். இது,
  ‘அருவுடம்பு’ எனவும்படும்.

4. அர்ச்சிராதி கணங்கள் - அக்நியை முவலாகவுடைய கூட்டங்கள் இவர்களே
  ‘ஆதிவாஹிகர்’ எனப்படுவர்கள். இவர்களை,