| தன 
தன்னை இவன் அறிவினை 
உடையவன் ஆகையாலே உபகாரமாக நினைத்திருப்பான்; பாரதந்திரியத்தாலே அவன் தனக்காகச் செய்தானாக 
இருப்பான் ஆதலின், 
‘அப்பனை’ 
என்கிறார்.
 தொன்மை பிதற்ற 
வல்லாரை - இயற்கையாக அமைந்த வள்ளல் குணத்திலே ஈடுபட்டு முறை கெடப் புகழுமவர்களை. 1‘என்னைத் 
தூஷித்தவர்களையும் துவேஷம் செய்தவர்களையும் கொடிய தன்மையுடையவர்களையும் பிறப்பு இறப்பு வழிகளிலே 
என்னை அடைவதற்குத் தடையாகவுள்ள பிறவிகளிலே எப்பொழுதும் தள்ளுகிறேன்,’ என்று தள்ளுமது இவன் 
செய்த குற்றங்களைக் கண்டு ஆகையாலே, அது ஒரு காரணம் பற்றி வந்த தன்மையே; இயற்கையான நிலையாவது, 
இப்படிப் பாதுகாத்தலேயாம். பிதற்றுமவர் கண்டீர் - 2‘அந்தப்புர விருத்தாந்தம் 
இவர்களுக்கு நிலையாவதே!’ என்று அவர்கள் விஷயத்திலே ஈடுபட்டு ஏத்துமவர்கள்தாம். நன்மை பெறுத்து 
- பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருத்தலை எல்லையாகவுடைய பகவானுக்கு அடிமைப்பட்டிருத்தல் ஆகிற செல்வத்தை 
உண்டாக்கி. எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே - நமக்கு அவன் திருவடிகளில் கைங்கரியத்தை 
உயிர் உள்ள வரையிலும் நடத்தக்கூடிய நம்பத்தக்கவர்கள்; இனி, ‘நம்பர்’ என்பதற்கு, 
‘முதலிகள்’ என்னலுமாம்.
 
(7) 
296 
        நம்பனை ஞாலம் படைத்த 
வனைத்திரு மார்பனைஉம்பர் உலகினில் 
யார்க்கும் உணர்வுஅரி யான்தன்னைச்
 கும்பி நரகர்கள் ஏத்துவ 
ரேலும் அவர்கண்டீர்
 எம்பல் பிறப்பிடை தோறுஎம் 
தொழுகுலம் தாங்களே.
 
 பொ-ரை : நம்பத்தகுந்தவனும், 
உலகத்தையெல்லாம் படைத்தவனும் திருமகளை மார்விலே தரித்திருப்பவனும் மேல் உலகங்களிலுள்ள எத்தகையோர்க்கும் 
அறிதற்கு அரியவனுமான எம்பெருமானுடைய திருநாமத்தை, கும்பீபாக நரகத்திலே கிடப்ப
 _____________________________________________________
 
1. ‘’இயற்கையாய் 
அமைந்த வள்ளல் குணத்திலே’ என்பது என்?இறைவனிடத்தில் ஒறுக்கும் தன்மை இலதோ?’ என்ன, அதற்கு 
விடை
 அருளிச்செய்கிறார், ‘என்னைத் தூஷித்தவர்களையும், என்று தொடங்கி. இது,
 ஸ்ரீ கீதை, 16 : 19.
 
 2. ‘அந்தப்புர 
விருத்தாந்தம்’ என்றது, ‘தீர்ந்த அடியவர்தம்மை இம்முறையிலே
 அர்ச்சிராதி மார்க்கத்தாலே 
கொண்டு போதல் முதலானவை பரம
 ரஹஸ்யம்,’ என்றபடி.
 |