|
யவன
யவனாதலின் ‘உள் நின்ற
மலர்ச்சுடரே’ என்கிறார். 1பகவானே! வேதங்களானவை முதலிலே வேறொரு பிரமாணத்தை
விரும்பாமலே தாமாகவே பிரமாணங்கள் ஆகின்றன; மநு முதலான ஸ்மிருதிகளானவை இதிகாசங்களோடு கூடிய
புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்சைகளோடும் கூடி அந்த வேதங்கட்குப் பொருள் விவரணம் செய்வதில்
உதவியாய் இருக்கின்றன; வேதங்களில் முற்பகுதியானது தேவரீருடைய திருவாராதன முறைமையைச்
சொல்லும் வகையில் முடிகின்றது; பிற்பகுதியோ என்னில், தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள்
இவற்றை விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது; ‘எல்லா வேதங்களாலும்
அறியப்படுகின்றவன் நானே!’ என்று தேவரீர் அருளிச்செய்ததுமுளது,’ என்றார் பட்டர்.
முறையால் இவ்வுலகெல்லாம்
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் - கரண களேபரங்கள் அற்றனவாய்ப் போக மோக்ஷங்களில்லாதனவாய்க்
கிடந்த அன்று இவற்றை உண்டாக்கி, படைத்த உலகத்தைப் பிரளயங்கொள்ள மஹா வராகமாய் இடந்து,
மீண்டு பிரளயம் வர வயிற்றினுள்ளே வைத்து நோக்கி, பின்னர் வெளிநாடு காண உமிழ்ந்து, மஹாபலி
போல்வார் பருந்து 2இறாஞ்சினாற்போன்று அபஹரிக்க எல்லை நடந்து மீட்டு, இப்படி
எல்லா விதமான ரக்ஷணங்களையும் செய்தவனே! ‘முறையால்’ என்றதற்குப் பொருள், ‘உடையவன் உடைமை
என்ற சம்பந்தத்தால்’ என்னுதல்; ‘மாறி மாறி’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்?
கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ பல படியாகப் படைத்தல் இருப்பது?’ எனில், படைத்தல் கர்மங்களைக்
கடாக்ஷித்தேயாகிலும் ஒரே காலத்தில் ஒரு சேரப்படைத்தல் அநுக்கிரகத்தின் காரியம்.
பிறை யேறு சடையானும்
நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே - சடை கழற்றாமல்
சாதக வேஷத்தோடேயிருந்தும், கலா மாத்திரமான சந்திரனைத் தரித்துக்கொண்டு சுகத்தையே பிரதானமாகக்
கொண்டுள்ள முதன்மை பெற்றவனாயிருக்கிற சிவனும், அவனுக்குங்கூடத் தந்தையான பிரமனும், இவர்களோடு
ஒக்க எண்ணலாம்படியிருக்கிற இந்திரனும், நீ ஸ்வாமியான முறையறிந்து
_____________________________________________________
1. ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்,
1 : 19.
2. இறாஞ்சுதல் -
அபகரித்தல்.
|