முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
270

உடையவர்களுக்கும் அறிய ஒண்ணாதவனை. கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் - மஹா பாபத்தின் பலமாகக் கும்பீ பாகமான நரகத்திலே கிடந்தும் அங்கே திருநாமத்தைச் சொல்லுவர்களாகில். அவர் கண்டீர் - எத்தகைய தீவினையாளரேயாகிலும், அவ்விருப்பிலே நமக்கு அடையத்தக்கவர். எம் பல் பிறப்பிடை தோறு எம் தொழுகுலம் தாங்கள் - நம்முடைய பல வகைப்பட்ட பிறவிகளிலே இடங்கள்தோறும் திருநாமத்தைச் சொன்னவர்கள் மாத்திரமே அன்று எனக்கு உத்தேஸ்யர்; அவர்கள் குலங்களாக எங்கள் குலத்துக்கு ஆசாரியர் ஆவார்கள். ‘அங்குத் துக்க அனுபவம் பண்ணாநிற்க, திருநாமத்தைச் சொல்லக்கூடுமோ?’ என்னில், ‘துன்பத்தின் மிகுதியாலே, ‘அம்மே! அப்பா!’ என்னக்கூடாதோ?’ என்று காணும் 1இவர்க்கு நினைவு.

(8)

297

        குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
            கீழ்இழிந்து எத்தனை
        நலந்தான் இலாதசண் டாளசண்
            டாளர்கள் ஆகிலும்
        வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
            மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்
        கலந்தார் அடியார் தம்மடி
            யார்எம் அடிகளே.


    பொ-ரை :
குலங்களைத் தரித்திருக்கின்ற நான்கு சாதிகளிலும் கீழே கீழே சென்று மிகச்சிறிய நன்மையுங்கூட இல்லாத சண்டாளர்களாகிலும், வலக்கையில் தரித்திருக்கின்ற சக்கரத்தையுடைய பெருமையிற்சிறந்தவனான நீலமணி போன்ற நிறத்தையுடைய எம்பெருமானுக்கு அடிமை என்று நினைத்து வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்களுடைய அடியார் அவர்தம் அடியார் எமக்குக் கடவுள் ஆவர்.

_____________________________________________________

1. ‘இவர்க்கு நினைவு’ என்கையாலே, ‘துக்கத்தை அனுபவிக்கும் சமயத்தில்
  திருநாமத்தைச் சொல்லுதல் அரிது,’ என்பது கருத்து.

  ‘அந்தக ராசலம் வந்தா லுனையழை யாதிருப்பார்
  அந்தக ராசலங் காபுரி யார்க்கரங் கா!மறையின்
  அந்தக ராசலக் கூக்குர லோயுமுன் ஆழ்தடங்கல்
  அத்தக ராசலத் தேதுஞ்ச நேமி யறுக்கக்கண்டே.’

  என்றார் திவ்வியகவியும்.