| இந 
இந்திரியங்களும் ஆசைப்பட்டும், 
மற்றை இந்திரியங்களினுடைய தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்பட்டும், 1அவை எல்லாவற்றினுடைய 
தொழில்களையும் தாம் ஆசைப்பட்டும், தம்மிலும் விடாய்த்த உறுப்புகளும் உறுப்புகளிலும் விடாய்த்த 
தாமுமாய், பல குழந்தைகளைப் பெற்றான் ஒருவன், வற்கடம் உண்டான காலத்திலே தன் பசிக்கு ஆற்றமாட்டாமல் 
அவற்றின் வாயிற் சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது, தன் வாயிற்சோற்றை அவை பறித்து ஜீவிப்பதாய், 
‘என் பசிக்கு என் செய்வேன்? என் குழந்தைகளின் பசிக்கு என் செய்வேன்?’ என்னுமாறு போன்று, 
தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாக நோவுபட்டுக் கூப்பிடுகிறார்.
 2‘மிக்க 
அன்போடு கூடின யான் துக்கத்தால் மிக இளைத்திருக்கிற உறுப்புகளால் ஆடவர் திலகனான அவ்விராமபிரானைத் 
தொடுவதற்குத் தகுதியாக நீ என்னிடத்தில் அருளைச் செய்’ என்றாள் அன்றோ பிராட்டியும்? 
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று, 
இவ்வுடம்பைக்கொண்டு அணைய ஆசைப்பட்டு, இவ்வாசையோடே முடிந்துபோய் இனி வேறு ஒரு சரீரத்தை மேற்கொண்டு 
அவரை அனுபவிக்க இராமல், ஆசைப்பட்ட இவ்வுறுப்புகளைக்கொண்டே நான் அநுபவிக்கும்படி செய்து 
தரவேண்டும் என்றாள் என்பது. அப்படி இவரும் நோவுபட்டு, 3ஆயுதங்களையும் ஆபரணங்களையும் 
அவற்றுக்குப் பற்றுக்கோடான திருமேனியையும் குணங்களையும் செயல்களையுமுடைய எம்பெருமானைக் காணவேண்டும் 
என்று, ‘ஈசுவரனால் முன்பு போலே குணங்களை அனு
 ____________________________________________________
 
1. ஏழாம் பாசுரம் 
முதல் மேல் மூன்று பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றி‘அவை எல்லாவற்றினுடைய தொழில்களையும் தாம் 
ஆசைப்பட்டும்’
 என்கிறார்.
 
 2. உறுப்புகளும் தாமும் 
தனித்தனியே விடாய்த்தமைக்குத் திருஷ்டாந்தம்
 அருளிச்செய்கிறார், ‘மிக்க அன்போடு கூடின 
யான்’ என்று தொடங்கி.
 ஸ்ரீராமா. சுந். 40 : 3, 
இது, திருவடியைப் பார்த்துப் 
பிராட்டி கூறியது.
 
 3. ‘பொன்னெடுஞ் 
சக்கரத் துன்னையே’ என்பது போன்றவைகளை நோக்கி,
 ‘ஆயுதங்களை’ என்றும், ‘முடியானே’ என்றதனை 
நோக்கி, ‘ஆபரணங்களை’
 என்றும், ‘மூவுலகும் தொழுதேத்தும் சீர்’ என்பது போன்றவைகளை நோக்கி,
 ‘குணங்களை’ என்றும், ‘கொள்வன் நான் மாவலி’ என்பது போன்றவைகளை
 நோக்கிச் ‘செயல்களை’ 
என்றும் அருளிச்செய்கிறார். ‘முன்பு போலே’
 என்றது, ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில் 
அருளிச்செய்த
 முன்னுரையை நோக்குக, பெருந்தானம் - பெரிய ஸ்வரம்.
 |