| ம 
மிகுதியைச் சொன்னபடி. 
அன்றியே, ‘இந்திரியங்களும் தனித்தனியே அறிவுடைப்பொருள்களைப்போன்று விடாய்க்கும்படி ஆயிற்று, 
பகவத் விஷயத்தில் இவர்க்குப் பிறந்த வாசனை,’ என்னலுமாம். ‘வாசனை விடாயைத் பிறப்பிக்குமோ?’ 
எனின், இதர விஷயங்களில் வாசனை விடாயைப் பிறப்பியாநின்றால், நற்குணக்கடலான இறைவன் விஷயத்திற் 
சொல்ல வேண்டா அன்றே? ‘நன்று; இதர விஷயங்கள், தாமே இனியவைகள் ஆகையாலே, அவற்றில் வாசனை 
விடாயைப் பிறப்பிக்கும்; இறைவனிடத்தில் வாசனை பண்ணுகிறது பலத்தைப் பெறுதற்குச் சாதனமாக 
அன்றோ? அங்ஙனம் இருக்க, இவ்வாசனை, விடாயைப் பிறப்பிக்கக் கூடுமோ?’ எனின், பகவத் விஷயத்தில் 
வாசனை பண்ணுகிறார் பண்ணுகிறது ஒரு பயனைப் பெறுவதற்காக அன்று; இதர விஷயங்களைப்போன்று இவ்விஷயம் 
ரசிக்க வேண்டும் என்று. 1’அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடு 
இல்லாத பிரீதி இருப்பதைப் போன்று, தேவரீரை நினைக்கிற எனக்கு அத்தகைய பிரீதியானது மனத்தில் 
நீங்காதிருக்க வேண்டும்,’ என்றான் 
ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
 ‘நன்று; ஓர் இந்திரியத்தின் 
தொழிலை மற்றை இந்திரியம் ஆசைப்படக் கூடுமோ?’ எனில், 2பாம்பு கண்ணாலே காண்பதுஞ்செய்து 
கேட்பதுஞ்செய்யாநின்றதே அன்றோ? அதுவும் அவன் கொடுத்ததே; அவன் தந்தால் அது நமக்குத் தட்டு 
என்? ‘அடியார்கட்கு அவன் கொடுக்க எங்கே கண்டோம்?’ என்னில், 3தம்மையே ஒக்க 
அருள வேண்டுகையாலே, ஒரு தேச விசேஷத்திலே தன்னை அனுபவிப்பார்க்குக் கொடா நின்றானே அன்றோ?
4தூது செய் கண்கள் கொண்டு ஒன்று
 _____________________________________________________
 
1. 
ஸ்ரீ விஷ்ணு புரா. 12. 20 : 19.
 2. இங்கு, ‘கட்செவி’ என்ற 
பெயரைத் திருவுள்ளம் பற்றி, ‘பாம்பு’ என்று
 தொடங்கி அருளிச்செய்கிறார்.
 
 3. ‘தம்மையே ஒக்க 
அருள வேண்டுகையாலே’ என்றது, ‘சாம்யாபத்தியைக்
 கொடுக்க வேண்டுகையாலே’ என்றபடி.
 
 ‘தம்மையே நாளும் 
வணங்கித் தொழுவார்க்குத்
 தம்மையே ஒக்க 
அருள்செய்வ ராதலால்’
 
 என்பது, 
‘திருமங்கை மன்னன்
திருவாக்கு.
 
 4. ஆயின், ஓர் 
உறுப்புத் தனக்குரிய தொழிலோடு மற்றோர் உறுப்பிற்குரிய
 தொழிலையும் செய்யும்படி செய்விக்கும் 
தன்மை ஈசுவரனிடத்தில் உளதோ?’
 என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தூது செய் கண்கள் 
என்று
 தொடங்கி. இது, 
திருவாய்மொழி, 
9. 9 : 9.
 |