முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
281

New Page 1

பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்குவது அன்றோ அவன்றன் படி? ‘நன்று; கரணங்களும் அறிவுடைப் பொருள்களைப் போன்று விடாய்த்தால், தம் காதல் குறையாதோ?’ என்னில், ஆறு கிண்ணகம் எடுத்தால் பல வாய்த்தலைகளாலும் போகச்செய்தேயும் கடலில் புகும் பகுதி குறைவற்றுப் போமாறு போன்று, இவருடைய காதலின் மிகுதி இவருடைய கரணங்களாகிற வாய்த்தலைகளாலே பெருகினாலும் காதல் குறையற்றே நிற்கும்.

300

        முடியானேஎ! மூவுல கும்தொழுது ஏத்தும்சீர்
        அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
        கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்
        நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.

   
பொ-ரை : ‘முடியையுடையவனே! மூன்று உலகத்தாரும் தொழுது ஏத்துகின்ற சீரையுடைய திருவடிகளையுடையவனே! ஆழ்ந்த கடலைக் கடைந்தவனே! கருடப்பறவையை வாகனமாகவும் கொடியாகவு முடையவனே! மேகம் போன்ற வடிவையுடையவனே! தேவலோகத்துள்ள பிரமன் முதலான தேவர்கட்கும் பெரியவனே!’ என்று கூறிக்கொண்டே என் மனமானது கிடக்கின்றது.

    வி-கு : ‘ஊர்தி’ என்பது, ‘ஊர்’ எனக் கடை குறைந்து நிற்கிறது; ஊர்தி - வாகனம். ‘ஊர் புள் கொடியானே’ என்று மாற்றிப் பொருள் கோடலுமாம். ‘என் நெஞ்சம் கிடக்கும்’ என மாறுக. வியாக்கியானத்தில் ‘முடியானேஎ! அடியானேஎ! கொடியானேஎ! நெடியானேஎ!’ என்ற பாடம் காண்கிறது. இத்திருவாய்மொழியின் அவதாரிகையில் ‘பெருந்தானத்தில் பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்’ என்று அருளிச்செய்வதனால், அளபெடை கொண்ட பாடமே சிறப்புடைத்தாம்.

    இத்திருவாய்மொழி நாற்சீர் அடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.

    ஈடு : முதற்பாட்டு. 1தம்முடைய திருவுள்ளத்துக்கு இறைவன் பக்கல் உண்டான காதலின் மிகுதியை அருளிச்செய்கிறார்.

_____________________________________________________

1. ‘நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சம்,’ என்றதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.