| த 
திருவடிகளையுடையவனே! திருமுடியின் 
அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். 1ஒருகாலும் அடி விடாரே. மேல் 
திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, 2வடிம்பு 
இடுகிறபடி. ‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.
 ஆழ்கடலைக் கடைந்தாய் 
- 3‘அளவிட முடியாத கடல் என்கிறபடியே, ஒருவரால் அளவிடப்போகாதபடி இருக்கிற 
கடலைக் குளப்படி போலே கலக்கினவனே! மேல் திருவாய்மொழியில் ‘ஆர் அமுது ஊட்டிய அப்பனை’ என்றது, 
பின்னாடுகிறபடி. இதனால், ‘இத்திருவடிகளில் இனிமையை விட்டு வேறு பிரயோஜனத்தை ஆசைப்பட்டார்க்கும் 
வருந்தி அவர்கள் விரும்பியவற்றைக் கொடுக்குமவன்’ என்பதனைத் தெரிவித்தவாறு.
 
 புள் ஊர் 
கொடியானேஎ - தன்னை உவந்தார் பக்கல் வந்து தோற்றும்படி பெரிய திருவடியை வாகனமாகவும் 
கொடியாகவும் உடையவனே! அடியார்கள் இருந்த இடத்தே செல்லுகைக்கு வாகனம்; தூரத்திலே கண்டு வாராநின்றான் 
என்று தரிக்கைக்குக் கொடி. இனி, ‘கடலைக் கடையப்புக்குத் தேவசாதி இளைத்துக் கைவாங்கின அளவிலே 
சாய்கரகம் போலே அமிருதத்தைக் கொண்டு வந்து கொடுக்கைக்குத் திருவடி திருமுதுகிலே வந்து தோன்றினபடியைக் 
கூறுகிறார்’ என்னுதல். கொண்டல் வண்ணா - 4திருவடி முதுகிலே தோன்றினபோது ஒரு 
மேருவைக்கினிய காளமேகம் படிந்தாற்போலே ஆயிற்று இருப்பது ‘மேரு
 
____________________________________________________ 
1. ‘ஒருகாலும் அடி 
விடாரே’ என்பது, ரசோக்தி. ‘மேல் திருவாய் மொழி’என்றது, 
திருவாய்மொழி, 
3. 7 : 7.
 
 2. வடிம்பிடுகை - 
தூண்டுதல்.
 
 3. 
ஸ்ரீராமா. யுத். 19 : 
31.
 
 4. ‘கருமுகில் தாமரைக் 
காடு பூத்துநீடு
 இருசுடர் 
இருபுறத்து ஏற்றி ஏடுஅவிழ்
 திருவொடும் 
பொலியஓர் செம்பொற் குன்றின்மேல்
 வருவபோற் 
கலுழன்மேல் வந்து தோன்றினான்.’
 
 என்ற கம்பநாட்டாழ்வாருடைய 
திருவாக்கு ஈண்டு ஒப்பு நோக்குக.
 
 கினிய - கபளீகரித்த; 
முழுதும் அபகரித்த.
 |