| ம 
மலையின் மேலே 
இருக்கின்ற நீர் உண்ட மேகம் போல’ என்பது 1பாரதம்.
அண்டத்து 
உம்பரில் நெடியானேஎ - 2அவன் தோளில் இருக்கும் இருப்பைக் கண்டால் ‘இவனே எல்லார்க்கும் 
முதல்வன்’ என்று தோற்றும்படி இருப்பவனே! என்றது, ‘பிரமன் முதலியோருடைய ஐஸ்வரியம் அடைய ஓர் 
அளவுக்கு உட்பட்டதாய்த் தன் ஐஸ்வரியம் மேலாய்த் தோன்றும்படி இருப்பவனே!’ என்றபடி. 3வடிவழகைப் 
போன்றே அவன் ஐஸ்வரியமும் மனக்கவர்ச்சியாய் இருக்கிறபடி.
 என்று கிடக்கும் 
- 4‘நெடியானே!’ என்றால் காணவேணும் கேட்கவேணும் என்கிற சொல்லால் தலைக்கட்டமாட்டுகின்றது 
இல்லை; ‘நெடியானேஎ!’ என்று பாடு ஓடிக் கிடக்கின்றது. 5‘துக்கத்தால் மிகுதியும் 
தபிக்கப்பட்டவராயும் மிக்க பராக்கிரமத்தையுடையவராயும் இருக்கிற ஸ்ரீ பரதாழ்வான் ஒரு முறை 
தீனசுரத்தோடு ‘ஆர்யா!’ என்று கூறி, வேறு வார்த்தை ஒன்றையும் கூற இல்லை,’ என்று சொல்லப்பட்ட ஸ்ரீ பரதாழ்வானைப்
போன்று 
கிடக்கிறது என்றபடி. என் நெஞ்சமே - 6‘கொடிய என் நெஞ்சம்’ என்னுமாறு போன்று 
கொண்டாடிச் சொல்லுகிறார் அல்லர்; ‘நான் செய்தபடி செய்ய, இதன் விடாய்க்கு என்செய்
 
____________________________________________________ 
1. 
பாரதம், ராஜதர்மம்.
 2.
‘புள்ளூர் கொடியானே! அண்டத்து 
உம்பரில் நெடியானே!’ என்று கூட்டி,
 பாவம் அருளிச்செய்கிறார், ‘அவன் தோளில் இருக்கும்’ என்று தொடங்கி.
 
 3. ‘கொண்டல்வண்ணா! 
அண்டத்து உம்பரில் நெடியானே!’ என்று கூட்டி,
 பாவம் அருளிச்செய்கிறார், ‘வடிவழகைப் போன்றே’ 
என்று தொடங்கி.
 
 4. ‘கிடக்கும்’ 
என்றதற்கு விசேடம் அருளிச்செய்கிறார், ‘நெடியானே என்றால்’
 என்று தொடங்கி. பாடு ஓடிக்கிடத்தல் 
- திரும்பமாட்டாது ஒரு பக்கமாகவே
 படுத்துக்கொண்டு கிடத்தல். ‘அப்படிக் கிடந்த பேர் உளரோ?’ 
என்ன,
 ‘துக்கத்தால் மிகுதியும்’ என்று தொடங்கி, அப்படிக் கிடந்த பேர் உண்டு,’
 என்கிறார்.
 
 5. 
ஸ்ரீராமா. 
அயோத். 99 : 88.
 
 6. ‘கொடிய என் நெஞ்சம் 
என்னுமாறு போன்று கொண்டாடிச்
 சொல்லுகிறாரல்லர்,’ என்றது, ‘பிறர், குற்றம் சொன்னாலும் 
அவனை
 விடாதே அவன் பக்கலிலே பற்றிக் கிடக்கப் பெற்றோமே இந்நெஞ்சம்!’
 என்று அங்கே நெஞ்சத்தைக் 
கொண்டாடிச் சொல்லுதலைப் போன்று
 சொல்லுகிறார் அல்லர் என்றபடி. இது, 
திருவாய். 5 : 3 : 5.
 |