|
New Page 1
வேன்!’ என்கிறார்.
‘‘என் செய்வேன்’ என்கிறது என்? தம்மால் நோக்க ஒண்ணாதோ?’ எனின், ‘நாதா! காப்பாற்ற வேண்டாவோ!
இவ்வயிறுதாரி நெஞ்சை என்னால் பரிக்கப் போமோ?’ என்கிறார்.
(1)
301
நெஞ்சமே நீள்நக
ராக இருந்தஎன்
தஞ்சனே! தண்இலங்
கைக்குஇறை யைச்செற்ற
நஞ்சனே! ஞாலம்கொள்
வான்குற ளாகிய
வஞ்சனே! என்னும்எப்
போதும்என் வாசகமே.
பொ-ரை : ‘என்னுடைய
வார்த்தையானது, மனத்தினையே எப்போதும் நீண்ட நகரமாகக் கொண்டிருந்த என் தஞ்சனே! குளிர்ந்த
இலங்கைக்கு இறைவனாகிய இராவணனை அழித்த நஞ்சனே! பூமியைக் கொள்ளும்பொருட்டு வாமனனாகிய வஞ்சனே!’
என்று கூறாநிற்கும்.
வி-கு :
தஞ்சம் - பற்றுக்கோடு.
கொள்வான் - வினையெச்சம். என்னும் - முற்று.
ஈடு :
இரண்டாம் பாட்டு.
1‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிறபடியே, ‘மனத்துக்குப் பின்னதான வாக்கு,
மனத்தின் தொழிலையும் தன் தொழிலையும் ஆசைப்படாநின்றது,’ என்கிறார்.
நெஞ்சமே நீள்
நகராக இருந்த என் தஞ்சனே - ‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும்
ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னாநின்றது; வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது. ‘மற்றை இந்திரியங்கள்,
பரம பதம், பாற்கடல் தொடக்கமான இடங்கள் என் படுகின்றனவோ! என்னே பாவம்!’ என்பார்,
2‘நெஞ்சமே
இருந்த’
எனப் பிரிநிலை ஏகாரங்
____________________________________________________
1, மேற்பாசுரத்தில்
நெஞ்சினைக் கூறி, இப்பாசுரத்தில் வாக்கைச் சொன்னதற்கு
பாவம், ‘மனம் முன்னே வாக்குப்
பின்னே’ என்பது. இது,
யஜீஷீயம் சுருதி.
2. ‘இருப்பிடம் வைகுந்தம்
வேங்கடம் மாலிருஞ் சோலைஎன்னும்
பொருப்பிடம்
மாயனுக்கு என்பர்நல் லோர்;அவை தம்மொடும்வந்து
இருப்பிடம் மாயன்
இராமா நுசன்மனத்து; இன்று அவன்வந்து
இருப்பிடம் என்றன்
இதயத்துள் ளேதனக்கு இன்புறவே.’
என்பது
இராமாநுச
நூற்றந்தாதி,
|