|
1
1‘தாவி
வையம் கொண்ட தடம் தாமரை’ என்னுமாறு போன்று முற்றுவமை இருக்கிறபடி. கோள் விடுத்தல் - ஒளியைப்
புறப்படவிட்டுத் திருஅதரம் மறைக்குமதனைத் தவிர்தல்.
2வேய்
அகம் - மூங்கிலாலே சமைத்த வீடு. பால் வெண்ணெய் தொடு உண்ட - அவ்வவ்வீடுகளில் பாலையும் வெண்ணெயையும்
களவு கண்டு அமுது செய்த. அன்றிக்கே, ‘பால் என்பதனைப் பெயர்ச்சொல்லாகக் கொள்ளாது, உருபு
இடைச்சொல்லாகக் கொண்டு வீட்டினிடத்தில் வெண்ணெயை அமுது செய்த’ என்று பொருள் கூறலுமாம்.
அன்றிக்கே, வேய் அகம்பால் வெண்ணெய் தொடு உண்ட என்பதற்கு, ‘வேய்த்து அகத்திலே உள்ள வெண்ணெயை
அமுது செய்த’ என்று பொருள் கூறலுமாம். வேய்த்து-சமயம் பார்த்து; ஆராய்ந்து. சமயம் பார்த்த
பின்பு அன்றோ களவு காண்பது? 3‘போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்
உறக்கம், ஓரா தவன்போல் உறங்கி அறிவுற்று, தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி, ஆராத
வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த, மோரார் குடம் உருட்டி முன்கிடந்த தானத்தே, ஓராதவன்போல்
கிடந்தானை’ என்றார்
திருமங்கை மன்னன்.
ஆன் ஆயர் தாயவனே
- பசுக்களையுடைய ஆயர்கட்குத் தாய்போலப் பரிபவன் ஆனவனே! என்று தடவும் என் கைகள் - படலை
அடைத்து உள்ளே புக்குக் 4கொண்டியிலே பிடிக்கக் காணும் தேடுகிறது. அன்றிக்கே,
‘வெண்ணெய் களவு கண்டு புசித்த விருத்தாந்தத்தை நினைந்தவாறே கைகளுக்குக் கண் தோற்றுகிறது இல்லை;
அதனாலே, தேடுகின்றன’ என்னுதல். 5‘கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம்
ஆண்டு
_____________________________________________________
1.
திருவாய்.
6. 9 : 9.
2. ‘வேய் அகம் பால்’
என்பதற்கு மூன்று விதமாகப் பொருள்
அருளிச்செய்கிறார்: ‘வேய்’ என்பது, முதல் இரண்டு
பொருள்களிலும்
பெயர்ச்சொல்; மூன்றாவது பொருளில் வினையடி.
3.
சிறிய திருமடல்.
4. கொண்டி - களவு.
தடவுதலுக்கு இரண்டு வகையில் கருத்து
அருளிச்செய்கிறார்: ஒன்று, களவு செய்யும் காலத்தில் பிடிப்பதற்காகத்
தடவுதல்; மற்றொன்று, கண் தெரியாமையாலே தடவுதல்.
5.
ஸ்ரீராமா. அயோத். 42 : 34.
இந்தச் சுலோகம், ஈடுபாட்டாலே
கண் தோன்றாமைக்கு மேற்கோள்.
இந்தச் சுலோகத்தையும் இதன் பொழிப்பையும் பின்னே தருகிறேன்:
|