|
வ
வியப்பு ஆய வியப்பு
இல்லா - வேறு சிலரிடத்திலே கண்டால் ஆச்சரியப்படுதற்குக் காரணமாயிருப்பவையடைய இவன் பக்கலிலே
கண்டால் இயல்பாய் இருக்கும். ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது ஆச்சரியத்திற்குக்
காரணமாயிருக்கும்; ‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, தக்கதாயிருந்ததேயன்றோ? என்றது,
‘எல்லாச் சொத்துகளையும் தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிசடன்’ என்பான் ஒரு
பிராஹ்மணன் வர, அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு
போ,’ என்ன, தண்டைச்சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக்கொண்டு
போனான்’ என்னும் சரிதப்பகுதியை உணர்த்தியவாறு. மெய்ஞ்ஞான வேதியனை - உண்மையைக் கூறுகின்ற
வேதங்களாலே சொல்லப்படுகின்ற ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை. சயம் புகழார் பலர் வாழும்
தனம் குருகூர்ச் சடகோபன் - 1‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர்தம்மைப்போன்று
சமுசாரத்தை வென்றமையால் வந்த புகழையுடைய ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து வாழ்க்கைக்குத்
தகுதியாகப் பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.
துய்க்கு இன்றித்
தொழுது உரைத்த ஆயிரத்துள் இப்பத்தும் ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும்
- ஐயம் திரிபுகள் இல்லாமம் உள்ளதை உள்ளவாறு அறிந்து அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும்,
ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே 2‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில்
அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே, அசத்துக்கு ஒப்பானவர்களை, ‘பரம்பொருள் உளன் என்று
அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே, உய்வு பெறச் செய்து விரோதிகளையும்
போக்கும். என்றது, ‘அரசன் இல்லாத தேசத்திலே அரசபுத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டிவிடுமாறு
போன்று, அழகர் திருவடிகளிலே செய்யும்
____________________________________________________
‘இப்பத்து உயக்கொண்டு
பிறப்பறுக்கும்’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
1. திருவிருத்தம்,
1.
2. தைத்திரீய
ஆனந். 6.
|