|
மல
மலடு நின்று பட்டினி விட்ட
என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால்
பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும் உதவுகிறது இல்லை;
அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும் இவ்வளவிலும்
மீளுகிறது இல்லை,’ என்றான்
தசரத சக்கரவர்த்தி.
(3)
303
கைகளால் ஆரத் தொழுது
தொழுதுஉன்னை
வைகலும் மாத்திரைப்
போதும்ஓர் வீடுஇன்றிப்
பைகொள்பாம்பு ஏறி
உறைபரனே! உன்னை
மெய்கொளக் காண
விரும்பும்என் கண்களே.
பொ-ரை : படத்தைக்
கொண்டுள்ள பாம்பின்மேலே ஏறி உறைகின்ற மேலானவனே! என் கண்கள் உன்னைக் கைகளால் நன்றாகத்
தொழுது தொழுது நாடோறும் ஒரு மாத்திரைப் பொழுதும் நீங்குதல் இன்றி உன்னை மெய்யாகக் காணவேண்டுமென்று
விரும்பாநின்றன.
வி-கு :
‘தொழுது தொழுது’
என்னும் அடுக்கு, இடையறாமையின்கண் வந்தது. ‘ஒரு மாத்திரைப்போதும்’ என மாறுக. மாத்திரைப்போது
- ஒரு முறை இமை கொட்டும் கால அளவு.
ஈடு :
நான்காம் பாட்டு.
1‘கண்களானவை கைகளின் தொழிலையும் தம் தொழிலையும் ஆசைப்படாநின்றன,’ என்கிறார்.
____________________________________________________
‘ராமம் மேநுகதா த்ருஷ்டி:
அத்யாபி நநிவர்ததே
ந த்வா பஸ்யாமி
கௌஸல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ.’
‘என்னுடைய பார்வையானது
ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும்
திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை;
என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’
என்பது, ‘ராமம்’
என்ற சொல்லிற்கு பாவம், ‘அறுபதினாயிரம்’ என்றது
முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற
சொல்லிற்கு பாவம்.
பசை - பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’
என்றது
கண்களை.
1. ‘கைகளால் ஆரத்
தொழுது காண விரும்பும்’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|