|
செ
சொல்லிற்று. அரவு
அணையான் அன்றோ சர்வேசுவரனாவான்? 1பர்யங்க வித்தையிற்சொல்லுகிற பேற்றை
ஆசைப்படாநின்றது என்றபடி.
உன்னை - அடையத்
தக்கவனுமாய் இனியனுமான உன்னை. மெய் கொள்ளக் காண - பத்தும் பத்தாக மெய்யே காண. என்றது,
‘மனத்தின் அனுபவம் எப்பொழுதும் இடையறாது நிற்கின்ற நினைவின் மிகுதியாலே நேரே கண்கூடாகக்
காணுதலைப் போன்று நன்கு வெளிப்பட, ‘இனிக் கிட்டிற்று’ என்று அணைக்கத் தேட, கைக்கு எட்டாமையாலே
கூப்பீட்டோடே முடிந்து போதலன்றிக்கே, 2பிரத்யபிஜ்ஞார்ஹமாம்படி தேடாநின்றது,’
என்றபடி. விரும்பும் - ஆசைப்படாநின்றது. ‘கிடைப்பது, கிடையாது ஒழிவது, ஆசைப்படுகின்றது’ என்றபடி.
என் கண்கள் தம் கைகளாலே தொழவும் தாம் காணவும் ஆசைப்படா நின்றன.
‘ஸ்ரீபரதாழ்வான்
பெருமாள் பின்னே
போன இளைய
பெருமாளை
3‘அவரும்
ஒருவரே’ என்று கொண்டாடி, அவர் போய்ச் செய்த அடிமையையும் தான் செய்ய ஆசைப்பட்டாற் போலே
ஆசைப்படாநின்றன,’ என்றபடி.
(4)
304
கண்களாற் காண
வருங்கொல்என்று ஆசையால்
மண்கொண்ட வாமனன்
ஏற மகிழ்ந்துசெல்
பண்கொண்ட
புள்ளின் சிறகுஒலி பாவித்துத்
திண்கொள்ள ஓர்க்கும்
கிடந்துஎன் செவிகளே.
பொ - ரை : என் செவிகள்,
‘கண்களாலே காண்பதற்கு வருவானோ?’ என்று ஆசையால், பூமியை மூன்று அடிகளால் அளந்துகொண்ட வாமனன்
தன்மேலே ஏறி வீற்றிருக்க அதனாலே மகிழ்ச்சி கொண்டு செல்கின்ற கருடப்பறவையினது சாமவேதத்
____________________________________________________
1. பர்யங்க வித்தையின்
தன்மை ‘அணைவ தரவணை’ என்ற பாசுரத்தின்
வியாக்கியானத்தில் கூறப்பட்டது. ஆங்குக் காண்க.
2. ‘பிரத்யபிஜ்ஞார்ஹமாம்படி’
என்றது, ‘முன்பு மனத்தினால்
அனுபவிக்கப்பட்டது யாதொன்று? அதுவே இப்பொழுது கண்களாலும்
அனுபவிப்பதற்குத்
தகுதியாம்படி’ என்றவாறு.
3. ‘என்பத்தைக்
கேட்ட மைந்தன் ‘இராமனுக்கு இளையார் என்று
முன்பொத்த தோற்றத்
தோமில் யான்என்றும் முடிவி லாத
துன்பத்துக் கேது
வானேன்: அவனது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை
உண்டே? அழகிது என் அடிமை!’ என்றான்’
என்பது
கம்பராமாயணம்.
|