முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
295

அன

அன்றோ? 1‘சாஸ்திரங்களிற் கூறப்பட்ட காரியங்களைத் தொடங்குவது வீண் ஆகாது; தோஷமும் இல்லை,’ என்பது ஸ்ரீகீதை. மண் கொண்ட வாமனன் - முடி சூடின பின்பும் 2கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட பின்பும் ‘வாமனன்’ என்கிறார்காணும். அன்றியே, இதிலே தாம் துவக்குண்டபடியாலே வளர்ந்த பின்பும் ‘வாமனன்’ என்கிறார் என்னுதல். ஏற மகிழ்ந்து செல் - தன்னை மேற்கொள்ள, அத்தாலே வந்த மகிழ்ச்சியின் மிகுதிக்குப் போக்குவிட்டுச் சஞ்சரியாநிற்கை. பண் கொண்ட - 3வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் சொல்லுதல்; அன்றி, 4கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் சொல்லுதல். சிறகு ஒலி பாவித்து - திருவடி சிறகின் ஒலியையே பாவித்து. திண்கொள் ஓர்க்கும் என் செவிகள் - முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை; இதனையே திண்ணிதாகப் புத்திபண்ணாநின்றது. அதன் பக்கல் 5பக்ஷபாதமன்றோ அதற்கு அடி?

(5)

305

        செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியெனும்
        கவிகளே காலப்பண் தேன்உறைப் பத்துற்றுப்
        புவியின்மேல் பொன்நெடுஞ் சக்கரத்து உன்னையே
        அவிவுஇன்றி ஆதரிக் கும்எனது ஆவியே.

____________________________________________________

1. ஸ்ரீகீதை, 2 : 40.

2. கருந்தரை - பாழ்நிலம்; என்றது, முடி சூடுதற்குமுன் உள்ள நிலையைக்
  குறித்தது.

3. ‘பண்’ என்பதற்கு இரு பொருள்: முதற்பொருள், சேணம்; இரண்டாவது
  பொருள், சாமங்கள்.

4. ‘சிரஞ்சேத னன்விழி தேகம் சிறையின் சினைபதங்கம்
   தரம்தோள்கள் ஊரு வடிவம் பெயர்எசுர் சாமமுமாம்
   பரந்தே தமதடி யார்க்குள்ள பாவங்கள் பாற்றியருள்
   சுரந்தே யளிக்கும் அரங்கர்தம் ஊர்திச் சுவணனுக்கே,’

  என்றார்
திவ்விய கவியும்.

     
கருடனுக்குத் திருவிருத்தென்பது சிரசு; ஸ்தோமம் என்பது ஆத்துமா.
  காயத்ரி என்பது கண்: சாமம் என்பது உடல்; பிருஹத்ரதந்தரம் என்பவை
  இரண்டும் சிறகுகள்; யஜ்ஞாயஜ்ஞியம் என்பது தோகை, மற்றைச் சந்த
  சுக்கள் மற்றை உறுப்புகள், பெயர் யஜீஸீக்கள் என்று வேதத்திலே
  கூறப்பட்டிருக்கிறது.

5. பக்ஷபாதம் என்பது சிலேடை: ‘சிறகு ஒலியின் பக்கல் தமக்கு உண்டான
  காதல்’ என்பது பொருள். ‘திருவடியால் உண்டான பக்ஷபாதம்’ என்பது
  தொனி.