| பெ 
    
பொ-ரை :
 
என் உயிரானது, செவிகள் 
வயிறு நிறையும்படியாக நின் கீர்த்தியின் உருவமான கனியென்னும் கவிகளை அவ்வக் காலங்கட்குரிய 
பண்களாகிய தேனைக்கலந்து அனுபவித்துப் பூமியின்மேலே அழகிய நீண்ட சக்கரத்தையுடைய உன்னையே 
இடைவிடாது ஆதரியாநின்றது.
 வி-கு : 
‘கனி என்னும் கவிகளே 
காலம் பண் தேன் உறைப்பத்துற்று’ என்னும் பகுதியை உற்று நோக்கல் தகும். அறிவு இன்றி - 
இடையீடில்லாமல். ‘எனதாவி ஆதரிக்கும்,’ என மாறுக.
 
 ஈடு : 
ஆறாம் பாட்டு. 1‘என்னுடைய 
உயிரானது உன்னுடைய கீர்த்தியைத் தன் செவிகளாலே கேட்க ஆசைப்படாநின்றது,’ என்கிறார்; 
‘ஆயின், உயிருக்குச் செவி உண்டோ?’ எனின், கன்னமிட்டுக்கொண்டும் கேட்க வேண்டும்படி அன்றோ 
பகவானுடைய கீர்த்தி இருப்பது?
 
 செவிகளால் ஆர - 
செவிகள் வயிறு நிறையும்படியாக. நின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே - கீர்த்தி 
உருவமாய்க் கனி போலே இருக்கிற கவிகளை. ‘கவி கனிபோல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே 
கனி கவியாயிற்று,’ என்கிறார். காலம் பண் தேன் உறைப்பத் துற்று - செருக்கராய் இருக்கும் 
அரசபுத்திரர்கள் நல்ல பழங்களைத் தேனிலே தோய்த்து உண்ணுமாறு போன்று, உன் கீர்த்தியாகிற 
கனிகளைக் 2காலங்கட்கு அடைத்த பண்களாகிற தேனிலே, அத்தேன் மிஞ்சும்படி கலந்து 
அனுபவித்து.
 
____________________________________________________ 
1. செவிகளால் ஆர 
நின் கீர்த்திக் கனி ஆதரிக்கும் எனது ஆவியே,’என்பதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். 
கன்னமிடுதல்,
 சிலேடை.
 
 2. ‘காலங்கட்கு 
அடைத்த பண்’ என்றது, ஒவ்வொரு காலத்திற்கும் பண்களைப்
 பாகுபடுத்தி வரையறை செய்துள்ளார்கள்; 
அதனைத் திருவுள்ளம் பற்றி
 அருளிச்செய்தபடி, பகற்காலத்திற்குரிய பண்கள்: புறநீர்மை, காந்தாரம்,
 பியந்தைக் காந்தாரம், கௌசிகம், இந்தளம், தக்கேசி, சாதாரி, நட்டபாடை,
 நட்டராகம், 
பழம்பஞ்சுரம், பஞ்சமம், காந்தார பஞ்சமம் என்னும்
 பன்னிரண்டுமாம். இராக்காலத்திற்குரிய 
பண்கள்: தக்கராகம், பழந்தக்கராகம்,
 சீகாமரம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், வியாழக்குறிஞ்சி,
 மேகராகக்குறிஞ்சி, அந்தாளிக்குறிஞ்சி, குறிஞ்சி என்னும் ஒன்பதுமாம்.
 இவ்விருவகைக் காலத்திற்கும் 
பொதுவான பண்கள்: செவ்வழி, செந்துருத்தி,
 தாண்டகம் என்னும் மூன்றுமாம். வேறு வகையாகவும் 
பிரித்துக் கூறுவர்.
 |