|
New Page 1
‘ஆயின், அவ்வனுபவம்
பரமபதத்தே போய்ப் பெறுவது ஒன்று அன்றோ?’ என்ன, புவியின்மேல் - ‘எங்கேனும் விடாய்த்தாரை
எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது; பசித்த இடத்தே சோறு இடவேண்டும்,’ என்கிறார். ‘தேசம்
இதுவே ஆனதைப் போன்று 1விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்கிறார் மேல்; பொன் நெடும்
சக்கரத்து உன்னையே - விரும்பத்தக்கதாய், இனிமை எல்லை இன்றிக்கேயிருக்கிற திருவாழியை
அடையாளமாக உடைய உன்னையே. ‘பரமபதத்தில் சக்கரத்தோடே இருக்குமோ?’ எனின், 2’பிரகிருதி
மண்டலத்துக்கு மேலான ஸ்ரீ வைகுண்டத்தில் வசிப்பவர், திருவாழி திருச்சங்கு கதை இவைகளைத் தரித்திருப்பவர்’
என்பது ஸ்ரீ
ராமாயணம்.
அவிவு இன்றி ஆதரிக்கும்
- இடையீடு இன்றி ஆதரியாநின்றது. 3‘‘கிடைத்தற்கு அரியது’ என்று பாராமல் கிடைக்கும்
விஷயத்திற்போலவே ஆசைப்படாநின்றது,’ என்றபடி. எனது ஆவியே - ‘தன்னடையே வரப்பெற வேண்டுங்காண்’
என்றால், அது கேளாது, ‘அவன் அருள் பெறுமளவில் நில்லாது’ என்னும்படியான ஆவி.
(6)
306
ஆவியே! ஆரமு தே;என்னை
ஆளுடைத்
தூவிஅம் புள்ளுடை
யாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம்
புலம்பப் பலகாலும்
கூவியும் காணப் பெறேன்உன
கோலமே.
பொ-ரை : ‘எனது உயிரே!
சுவை நிறைந்த அமிர்தமே! என்னை அடிமை கொண்டுள்ள சிறகையுடைய அழகிய கருடப் பறவையை உடையவனே!
சுடர் பொருந்திய சக்கரத்தை உடையவனே! பாவியேனுடைய மனமானது புலம்பும்படி பல தடவை கூவியும் உன்
கோலத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுகின்றிலேன்,’ என்கிறார்.
வி-கு :
‘புலம்பக் கூவியும்
காணப்பெறேன்,’ எனக் கூட்டுக. ‘ஆளுடை’ என்பது உடையானுக்கு அடைமொழி: புள்ளுக்கு அடைமொழியாக்கலுமாம்.
____________________________________________________
1. ‘விஷயமும் இதுவேயாக
வேண்டும்,’ என்றது, ‘பரமபதத்தில் அசாதாரண
விக்கிரஹமே ஆகவேணும்,’ என்றபடி.
2.
ஸ்ரீ ராமா. யுத். 114 :
15. இது, இராவணன்
இறந்த பின் மண்டோதரி
கூறியது.
3. ‘பொன் நெடும்
சக்கரத்து உன்னை’ என்றதனை நோக்கிக் ‘கிடைத்தற்கு
அரியது என்று பாராமல்’ என்கிறார்.
|