|
என
எனின், ‘இறைவனோடு சேர்க்குமவர்களுக்குத்
தாம் அடிமை என்றே அன்றோ இவர் இருப்பது? இதனால், 1‘மற்றை அமுதத்தைக் கொண்டு
வருமவனேகாணும், இவ்வமுதத்தையும் கொண்டு வருவான்,’ என்கிறார் என்பதும், ‘தாரகமுமாய் இனிய
பொருளுமாய் இருப்பது ஒன்றைக் கொண்டு வந்து தருவார் உண்டாயிருக்க, ஆறி இருக்க விரகு உண்டோ?’
என்கிறார் என்பதும் பெறுதும். சுடர் நேமியாய் - அழகுக்கும் விரோதிகளை அழிப்பதற்கும் தானேயாக
இருக்கும் கருவியை உடையவன்; இதனால், ‘வரும் வழியில் எவையாகிலும் தடைகள் உளவாகிலும் கைம்மேலே
தீர்த்துக்கொண்டு வருகைக்குக் கருவி உண்டு,’ என்பதனைத் தெரிவித்தபடி.
பாவியேன் கூவியும்
காணப் பெறேன் - 2‘ஆரே துயர் உழந்தார்?’ என்கிறபடியே, பகவத்விஷயத்தை ஆசைப்பட்டாரில்
இழந்தார் இல்லைகண்டீர்; ஆதலால், கூவியும் காணப் பெறாத தாம் தம்மைப்
‘பாவியேன்’
என்கிறார்.
பாவியேன் நெஞ்சம் - 3‘நந்தன் பெற்றனன்; நல்வினை இல்லா நங்கள்கோன்
வசுதேவன் பெற்றிலனே!’ என்கிறபடியே, ‘தமப்பனான சம்பந்தம் ஒத்திருக்க, புண்ணியம் செய்யாத
என்னைக் கைப்பிடிக்கையால் அன்றோ ஸ்ரீ வசுதேவர் இழந்தது?’ என்று தேவகி கூறியது
___________________________________________________
1. மற்றை அமுதம்
- தேவாமிர்தம்; இதனை,
‘ஏஎர் வயங்குபூண்
அமரரை வௌவிய அமிழ்தின்
பயந்தோள் இடுக்கண்
களைந்த புள்ளினை’
என்ற பரிபாடற்பகுதியானும்,
அதற்குப் பரிமேலழகர் எழுதிய ‘பயந்தோள்
- தன்னைப் பெற்ற விந்தை. அவளது இடுக்கண் களைதலாவது,
இந்திரன்
குதிரை வால் வெள்ளையாய் இருப்பதென்றும் அன்றாயின் நினக்கு
அடிமையாவல் என்றும் கத்துருவினோடு
ஒட்டம் ஒட்ட, அவள் அதனை
வஞ்சனையாற் கரிதாக்க, அஃதறியாது அவட்கு அடிமையாய் வருந்துதல்;
அதனைக் களைதலாவது, ‘இந்திரன் அமராவதிக்கண் கொண்டுபோய்
வைத்த அமிர்தம் தரின் அவள்
அடிமை மீளும்,’ என்று கத்துரு சொல்ல,
அவட்கு அது கொடுத்து அவ்வடிமை மீட்டல்,’ என்ற உரையானும்
உணரலாகும்.
(பரிபா. 3. 15.)
2.
மூன்றாந்திருவந்.
27.
3. ‘பாவியேன் ஆகையாலே
இழந்தேன்’ என்றார்; ‘பாவியேன் நெஞ்சு
ஆகையாலே இழக்க வேண்டிற்று,’ என்று வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார், ‘நந்தன் பெற்றனன்’ என்று தொடங்கி. இப்பாசுரம்,
பெருமாள் திருமொழி.
|