முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
300

New Page 1

போன்று, எனக்குக் கரணமாய் இருப்பதனால் அன்றோ இது இழக்கவேண்டிற்று?’ என்பார், ‘பாவியேன் நெஞ்சம் புலம்ப’ என்கிறார். 1‘என்னுடைய தீவினைகள்தாம் காரணம்’ என்றாள் பிராட்டி. புலம்ப - நெஞ்சானது காணப்பெறாத இழவோடே கூப்பிட. ‘ஆயின், காணப்பெறாதது அண்மையில் இன்மையாலோ?’ எனின், அன்று; 2‘கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான்,’ என்னுமாறு போன்று, 3நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை அன்றோ நெஞ்சு காணப்பெறாமல் கூப்பிடுகிறது? பலகாலும் - 4ஒருகால் கூப்பிட்டார்க்கும் இழக்க வேண்டாத விஷயத்திலே பல கால் கூப்பிட்டும். கூவியும் காணப் பெறேன் - ‘ஒன்றில் விருப்பம் பெற்றேன் அல்லேன்; சொரூபம் பெற்றேன் அல்லேன்,’ என்பார், ‘கூவியும்’ என்கிறார்.

    5
‘இராக்கதர்களைக் கொன்று என்னை அழைத்துச் செல்வாராயின், அது அவருக்குத் தக்க செய்யலாம்,’ என்று இருக்கப் பெற்றேன் அல்லேன்; 6மடல் ஊர்ந்தார் பெற்ற பேற்றைப் பெற்றேன் அல்லேன். என் சொரூபத்தையும் அழித்தேன், அவன் சொரூபத்தையும் அழித்தேன். அவன் நீர்மையையும் அழித்தேன், என் அடிமைத் தன்மையையும் அழித்தேன். அவன் ஈசுவரத்துவத்தையும் அழித்தேன், என்னுடைய ஈசிதவ்யத்துவமும் போயிற்று. இனி, கொள்ள இருக்கிறார் யார், கொடுக்க இருக்கிறார் யார்? உன கோலமே - இரண்டு தலையையும் அழித்துப் பெற வேண்டும் விஷயத்தினுடைய சிறப்புச் சொல்லுகிறது. பிரிவு காலத்தில் கண்ணுறங்குதல், சூது சதுரங்கங்களோடே போது

____________________________________________________

1. ஸ்ரீராமா. சுந், 38, 48.

2. முதல் திருவந். 56.

3. மூன்றாந் திருவந். 81.

4. ‘ஒருகால் கூப்பிட்டார்க்கும் இழக்க வேண்டாத விஷயம்’ என்றது, ஸ்ரீ
  கஜேந்திராழ்வான் ஒருகால் கூப்பிட வந்து முகங்காட்டினமையைத்
  திருவுள்ளம் பற்றி.

5. முன்னர்ப் போந்தவற்றை விவரிக்கிறார், ‘இராக்கதர்களைக் கொன்று’ என்று
  தொடங்கி. இது, பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது. ஸ்ரீராமா,
  சுந். 9 : 30.

6. ‘மடலூர்ந்தார்’ என்றது, உஷையைக் குறித்தது. மடலூர்தல் - ஈண்டு முயற்சி
  செய்தல். ‘அவன் ஈசுவரத்துவத்தை’ என்றது, இறைவனுடைய நியமிக்குந்
  தன்மையைக் குறித்தது. ‘ஈசிதவ்யத்துவம்’ என்றது, நியமிக்கப்படுகின்ற
  தன்மை.