முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
301

New Page 1

போக்குதல் செய்யலாம் விஷயமாகப் பெற்றேனோ? 1உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்றும், 2‘என் நினைந்து போக்குவர் இப்போது?’ என்றும் வருகின்றபடியே, கண்ணும் உறங்காதே போது போக்கவும் அரிதாய் அன்றோ இருப்பது?

(7)

307

 

        கோலமே! தாமரைக் கண்ணதுஓர் அஞ்சன
        நீலமே! நின்றுஎனது ஆவியை ஈர்கின்ற
        சீலமே! சென்றுசெல் லாதன முன்நிலாம்
        காலமே! உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே?

   
பொ-ரை : அழகே உருவமானவனே! தாமரை போன்ற கண்களையுடையதான ஒப்பற்ற அஞ்சனத்தினது நீல நிறமே ஒரு வடிவாக உடையவனே! நிலைபெற்று எனது உயிரை அறுக்கின்ற சீலமே வடிவாக உடையவனே! இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் மூன்று காலமும் நீ இட்ட வழக்காம்படி இருப்பவனே! உன்னை என்று கண்டு அனுபவிப்பேன்?

    வி-கு : ஈர்தல் - அறுத்தல். முன்னிலாங்காலம் - எதிர்காலம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 3‘உம்முடைய விருப்பத்தைச் செய்கைக்கு ஒரு காலம் இல்லையோ? அது வருமே அன்றோ?’ என்ன, ‘அதுவும் நீ இட்ட வழக்கு அன்றோ?’ என்கிறார்.

    கோலமே - 4அழகும் அழகுக்குப் பற்றுக்கோடான பொருளும் என்று இரண்டு இன்றிக்கே, அழகுதானே வடிவாய் இருக்கிறபடி. 5ஞாதாவின் பக்கலிலே ஞான வியபதேசம் பண்ணா 

____________________________________________________

 

1. திருவிருத்தம், 97.

2. பெரிய திருவந். 86.

3. ‘சென்று செல்லாதன முன்னிலாம் காலமே’ என்றதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்,

4. ‘கோலத்தையுடையவன்’ என்னாது, கோலமேயாகச் சொன்னதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘அழகும்’ என்று தொடங்கி.

5. ‘ஆனால், குணத்தின் பெயரால் குணத்தையுடைய பொருளைக் கூறலாமோ?’
  என்னும் வினாவிற்கு விடையாக, ‘ஞாதாவின் பக்கலிலே’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். ஞாதா - அறிகின்றவன்; ஆத்துமா. ஞானவியபதேசம் -
  ஞானமாகவே வழங்குதல். தத்குணசாரத்துவத்தாலே - ஞான குணத்தின்
  சாரத்துவத்தாலே; சாரத்துவம் - முக்கியத்துவம்; சிறந்த தன்மை. ‘குணத்தின்
  முக்கியத்துவத்தாலே குணத்தையுடைய பொருளைக் குணமாகவே கூறலாம்,’
  என்பது கருத்து.