|
என
என்கிறது, இனி
வருகின்ற எதிர்காலத்தை. 1‘காலத்திற்கும் எமனுக்கும் இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்கட்கும்
பகவான் ஒருவனே ஏவுகின்றவன் ஆகிறான்; உனக்குச் சொல்லுகிறேன்; இது சத்தியம்,’ என்பது சஞ்சயன்
கூற்று. உன்னை எந்நாள் கண்டுகொள்வன் - வடிவழகும் குணங்களும் விடலாய் இருந்தன இல்லை; காலக்
கழிப்புச் சொல்ல ஒண்ணாதபடியாய் இருந்தது; ஆனபின்பு, நான் உன்னைக் காண்பது என்று
சொல்லாய்? என்றது, 2‘பதினான்கு வருஷங்களும் முடிவுற்ற பின்னர், பஞ்சமி திதியில்’
என்றாற்போன்று, நீயும் ‘நம்மை இந்நாள் காணக் கடவை என்று சொல்லாய்’ என்றபடி.
(8)
308
‘கொள்வன்நான்,
மாவலி! மூவடி தா’என்ற
கள்வனே! கஞ்சனை
வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர்
ஆயிரம் தோள்துணித்த
புள்வல்லாய்! உன்னைஎஞ்
ஞான்று பொருந்துவனே?
____________________________________________________
1
பாரதம் உத்தியோகபர். 68: 13.
இது, ‘காலம் அவன் இட்ட
வழக்கு,’
என்பதற்குப் பிரமாணம். இந்தச் சுலோகத்தையும் இந்தச் சுலோகத்திற்கு
வியாக்கியாதா
அருளிச்செய்த பொருளையும் கீழே தருகிறேன்:
‘காலஸ்யச ஹி
ம்ருத்யோஸ்ச ஜங்கமஸ்த்தாவரஸ்யச
ஈஸதே பகவான் ஏகஸ்
ஸத்யமேதத் ப்ரவீமி தே:.’
பதார்த்தங்களினுடைய உற்பத்திக்கு
முன்பும் நின்று இவையழிந்தாலும்
நிற்கக் கடவ காலத்துக்கும், இவற்றையெல்லாம் அழிக்கின்ற தேவர்களுக்கும்
இவற்றை எல்லாம் படைக்கின்ற தேவர்களுக்கும், (ஆயின், ‘மிருத்யு’ என்ற
சொல்லானது யமன்
ஒருவனைக் குறிக்குமேயன்றி அழிக்கின்றவர்களைக்
காட்டுமோ?’ எனின்,) ‘ம்ருத்யு: யஸ்ய
உபசேஸநம்’ என்று ‘ம்ருத்’
சப்தத்தாலே அழிக்கின்ற தேவர்களைச் சொல்லக் கடவதிறே.
(படைக்கின்ற
தேவர்கள் என்ற பொருள் ‘மிருத்யஸ் ச’ என்ற
பதத்திலேயுள்ள ‘சகாரத்’தால் கொள்ளப்பட்டது.) சிருஷ்டிக்குக் கர்மீபவித்த
பதார்த்தங்களினுடைய உற்பத்திக்கு முன்பும் உளனாய், அழிந்தாலும்
உளனாய், என்றும் ஒக்க உணர்ந்திருந்து சிரஷ்டாக்களுக்கும்
ஸம்கர்த்தாக்களுக்கும்
ஸ்ருஞ்சயருமான இவற்றையடையத் தன்புத்தி
அதீனமாக நியமிக்கிறான் ஒருவனே! ‘சத்யம் இத்யாதி’
- பகவத்
விஷயத்தில் அர்த்தவாதமில்லை; தன்னை ‘ஆப்தன்’ என்று
விஸ்வசித்தவனுக்குப் பொய்
சொல்வாரில்லை என்பது. (‘மிருத்யு’ இது,
கடவல்லீ
உபநிடதம், 1 : 2.)
2.
ஸ்ரீராமா. யுத். 117 : 1.
|