|
இறங
இறங்கினான் ஆகையாலே
பிரபுக்களை உபசரித்து வார்த்தை சொல்லி அறியானே! முன்பு சிலர்க்குத் தாழ்வு சொல்லியறியான்;
பிறந்த பின்பு வாசனை பண்ணுகைக்கு நாள் இல்லை; அதனாலே,
‘மாவலி’
என்கிறான்.
எல்லோரும் தன்னை
உயர்த்திச் சொல்லுமது ஒழிய இப்படிச் சொல்லக் கேட்டு அறியாமையாலே ‘இவன் ஒரு பாலன் தன்
முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து,
‘உனக்கு வேண்டுவது என்?’ என்றான்.
‘மூவடி’
என்கிறான். தன் பக்கல்
கொள்ளுமவர்களில் இப்படிச் சிறுக விரும்புகின்றவர்கள் இல்லாமையாலே விருப்பு இன்றியே இருந்தான்;
‘பராமுகம் பண்ணாதே
‘தா’
என்கிறான். என்ற கள்வனே
- இந்திரன் சரணம் புக்கு நின்றான்; கொடையாளியாய் இருப்பான் ஒருவன் அவனுடைய இராச்சியத்தைப்
பறித்துக்கொண்டான்; ‘இராவணன் முதலியோர்களைப் போன்று அழியச்செய்யப் போயிற்று இல்லை,
சிறிது தர்மத்தை ஏறிட்டுக்கொண்டு நிற்கையாலே; இந்திரனோ, சரணம் புக்கு நின்றான்; இனிப்
போம் வழி என்?’ என்று பார்த்துத் தன்னை இரப்பாளன் ஆக்கி, சுக்கிரன் முதலியோர், ‘இவன்
தேவ காரியம் செய்ய வந்தான்,’ எனச்செய்தேயும், அவ்வார்த்தைகள் அவன் நெஞ்சில் படாதபடி
அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய்மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக்
‘கள்வனே’
என்கிறார்.
கஞ்சனை வஞ்சித்து
- கம்ஸன் மாமனாய், விழிப்புடன் இல்லாமையாலே புகுந்ததாகத் தானும் துக்கத்தையுடையனாய்க் கண்ண
நீர் பாய்த்துவானாக வாசலிலே குவலயாபீடத்தையும் மல்லரையும் நிறுத்தி வைக்க, அவற்றை அழித்து,
கம்ஸன் கோலின வஞ்சனத்தை அவன்தன்னோடே போக்கினவனே! வாணன் உள் வன்மை தீர ஓர் ஆயிரம்
தோள் துணித்த புள் வல்லாய் - 1‘சர்வேசுவரனை அடைந்த பிறகு அந்த சீவாத்துமா
பயம் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி
இருந்த வாணனுடைய நெஞ்சுவலி 2கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச்
சாரிகை வந்தவனே! ‘கரபாதை அன்றோ
_____________________________________________________
1.
தைத்திரீயம்
2. ‘கைமேலே’ என்றது,
சிலேடை: ‘உடனே’ என்பதும், ‘கையோடே’ என்பதும்
பொருள். ‘கரபாதை’ என்றதும் சிலேடை.
|