| இவ 
இவனை இப்படிக் கலங்கப்பண்ணிற்று’ 
என்று 1அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து இரண்டு கரங்களோடு நிறுத்தினவன்,’ என்பார், 
‘உள் வன்மை 
தீர ஆயிரம் தோள் திணித்த’ 
என்கிறார். 2‘ஆயிரம் 
கரம் கழித்த ஆதி மால்’ என்றார் 
திருமழிசைப்பிரான்.
3‘இவன் 
கைவிஞ்சினான்’ என்று இவனைக் கை கழிய விட்டான் என்றபடி. ‘வாள் வல்லாய், தோள் வல்லாய்’ 
என்பன போன்று ‘புள் வல்லாய்’ என்கிறார்.
 உன்னை எஞ்ஞான்று 
பொருந்துவனே - 4சொரூபஞானம் பிறந்தவாறே அவன்பக்கல்நின்றும் பிரிந்தாற்போலே 
இருக்கிறது காணும் இவர்க்கு. 5‘சூரியனோடு சேர்ந்த ஒளியைப் போன்று நான் ஸ்ரீராமபிரானோடு 
சேர்ந்தேயிருக்கிறேன், வேறுபட்டவள் ஆகேன்,’ என்கிற பிராட்டி அசோகவனத்திலே பிரிந்திருந்தாற் 
போலே இருக்கிறதுகாணும், சொரூபஞானம் பிறந்தவாறே உடம்புடன் இருக்கும் இருப்பு,’ என்றபடி. ‘சொரூபஞானம் 
பிறந்தால் அவன் பக்கல்நின்றும் பிரிந்தது போன்று தோன்றும்படி எங்ஙனே?’ எனின், சொரூபஞானம் 
பிறந்தவாறே முன்புள்ள காலமெல்லாம் சமுசாரியாய் நின்ற நிலை வந்தேறியாய்த் தோன்றிற்று. 
ஆயின், பொருந்துதல் நிச்சயமாமோ 
‘எஞ்ஞான்று’ 
என்கைக்கு?’ எனின்,
6‘முற்றறிவினனாய்ச் சர்வசத்தியையுடையனாய்ச் சீலம் முதலான குணங்களையுடையனான உன்னைப் 
பார்த்தால் இழக்க வேண்டுவது இல்லை; நான் இழக்கமாட்டாதவனாய் இருந்தேன்; ஆன பின்பு, உன்னைக் 
கிட்டும் காலம் சொல்லாய்,’ என்கிறார்.
 
 எல்லா ஆத்துமாக்களுக்கும் 
அடிமையாய் இருக்கும் தன்மை பொதுவாக இருக்கச் செய்தேயும், பத்தரும் முத்தரும் நித்தியரும்
 
____________________________________________________ 
1. ‘அடுத்தேறாக’ 
என்பது சிலேடை: ‘அதிகமாக’ என்பதும், ‘அடுத்து அடுத்துஏறின’ என்பதும் பொருள்.
 
 2. 
திருச்சந்த 
விருத். 53.
 
 3. ‘’இவன் கைவிஞ்சினான்’ 
என்று இவனைக் கை கழியவிட்டான்,’ என்றது,
 ‘கைகள் பலவாயின என்று நினைத்துக் கைகளைக் குறைத்தான்,’
 என்றபடி. ‘சொன்னபடி கேட்டு நடவாதவன் என்று நீக்கினான்,’ என்பது
 ரசோக்தி.
 
 4. ‘கூடுவனே’ என்னலாயிருக்க, 
‘பொருந்துவனே’ என்றதற்கு பாவம்
 அருளிச்செய்கிறார், ‘சொரூபஞானம்’ என்று தொடங்கி.
 
 5. 
ஸ்ரீ ராமா. சுந். 21 : 15.
 
 6. ‘கள்வனே’ என்கையாலே 
முற்றறிவும், ‘கஞ்சனை வஞ்சித்து’ என்பது
 போன்றவைகளால் சர்வசத்தியும், ‘ஈர்கின்ற சீலமே’ 
என்கையாலே சீலம்
 முதலான குணங்களும் பெறப்படுதல் காண்க.
 |