|
என
என்கிற பிரிவைப்
போன்றதே அன்றோ பிராட்டிமார்களும்? ஆகையால், ‘வேறுபட்டவள் ஆக மாட்டேன்’ என்கிற பிராட்டியினுடைய
வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது? ‘ஆயின்,
ஈசுவரனோடு ஐக்கியமாக ஈசுவர கோடியாகச் சொல்லாநிற்க, பிராட்டியை உயிர்கள் கூட்டத்தோடு
சொல்லுதல் என்?’ எனின், ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம்,
அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன; ஐக்கியம் சொல்லுகிற இடமெல்லாம்
‘பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று இடைப்பிற வரலாக ஓர் உருவிலே
அருளிச்செய்தார். ‘வாணனுடைய 1கைப்பற்றையும் கழித்து இறையிலி ஆக்கின உன்னை எந்நாள்
வந்து கிட்டுவேன்?’ என்கிறார்.
(9)
309
பொருந்திய மாமரு
தின்னிடை போயஎம்
பொருந்தகாய்! உன்கழல்
காணிய பேதுற்று
வருந்திநான் வாசக
மாலைகொண்டு உன்னையே
இருந்திருந்து எத்தனை
காலம் புலம்புவனே?
பொ-ரை : பொருந்திய
பெரிய மருதமரங்களினிடையே சென்ற எம் பெருந்தகாய்! உன் திருவடிகளைக் காணவேண்டும் என்று மயங்கி
வருந்தி வார்த்தைகளாகிய மாலையைக் கொண்டு இருந்து உன்னையே எத்தனை காலம் புலம்புவேன்?
வி-கு :
‘போய பெருந்தகாய்’
என்க. காணிய - வினையெச்சம்.. பேதுறல் - அறிவு திரிதல்.
ஈடு :
பத்தாம் பாட்டு.
2‘உன்னைக் காணப்பெறாத துன்பத்தால் வருந்துகிற நான், இன்னம் எத்தனை காலம் கூப்பிடக்
கடவேன்?’ என்கிறார்.
பொருந்திய மா மருது -
மருது, மா மருது, பொருந்திய மா மருது. மருது என்கையாலே மரத்தைச் சொல்லி, 3‘மரங்கள்
________________________________________________
1. கைப்பற்றையும்
கழித்து - ‘கைகளைப்பற்றி உடையவனாய் இருந்தமையையும்
கழித்து’ என்பது பொருள். ‘கைவசமானதையும்
கழித்து’ என்பது சிலேடை.
இறையிலியாக்கி - இறையில்லாதவனாக்கி. இறை - தெய்வம்: கை.
2. ‘கழல் காணிய
பேதுற்று வருந்தி நான் எத்தனைகாலம் புலம்புவனே,’ என்ற
பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
3.
திருமாலை,
27.
|