|
கள
களிலும் அவனை அடி விடாரே.
‘மஹரிஷியைப் போன்று கண்ணழகைக் காண ஆசைப்படாமல், இவர் திருவடிகளின் அழகைக் காண ஆசைப்படுவான்
என்?’ எனில், தந்தாம் ஜீவனத்தை நோக்கத் தேடுமித்தனை அன்றோ எல்லாரும்? ஆகையாலே,
இவரும் தம்முடைய 1ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.
பேதுற்று - அறிவு
கெட்டு. வருந்தி - இழந்த விஷயத்துக்குத் தக்கபடி அன்றோ கிலேசமும் இருப்பது? நான் - 2அடியே
பிடித்து ஜீவித்துப் போந்த நான்; 3‘நின் செம் மா பாத பற்புத்தலை சேர்த்து ஒல்லை’
என்கிறபடியே, அத்திருவடிகள் பெறில் 4தலையாக ஜீவித்து, அஃது இல்லையாகில் இல்லையாம்படியான
நான் என்றபடி. வாசகமாலை கொண்டு - 5ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று, இவர்க்கு
ஒரு சொற்கொண்டு சொல்லுகை. உன்னை - 6‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத
வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, பேசித் தலைக்கட்ட
ஒண்ணாத உன்னை. இருந்து இருந்து - 7ஒருகால் ஒன்று சொல்லப்புக்கால் அது தலைக்கட்டு
___________________________________________________
இவர்க்கு உண்டாயிருக்கிறது
என்னும் இடம் தோன்ற, ‘எல்லா
நிலைகளிலும் அவனை அடி விடாரே’ என்று அருளிச்செய்கிறார். அடி
என்றது சிலேடை: திருவடிகள்; முதல்.
1. ‘ஜீவனத்தை நோக்க’
என்பதற்குப் ‘பிராணனை ரக்ஷிக்க’ என்பது
தொனிப்பொருள்; தமக்குப் பிராணனான திருவடிகளை நோக்க
என்பது
நேர்பொருள்.
2. ‘துயரறு சுடரடி தொழுது
எழு’ என்றதனைக் கடாக்ஷித்து, அருளிச்
செய்கிறார், ‘அடியே பிடித்து ஜீவித்துப் போந்த நான்’
என்று. ‘அடியே
பிடித்து’ என்பதற்குத் திருவடிகளையே பிடித்து என்பது நேர்ப்பொருள்:
‘முதலிலே பிடித்து’
என்பது தொனிப்பொருள்.
3.
திருவாய். 2. 9 : 1.
4.
தலையாக ஜீவித்து -
‘தலையிலே வைத்துக்கொண்டு ஜீவித்து’ என்பது
நேர்ப்பொருள்; ‘நன்றாக ஜீவித்து’ என்பது தொனிப்பொருள்.
5. ‘கொண்டு’ என்றதற்கு
பாவம் ‘ஒருமலை எடுத்தாற்போலேயாயிற்று,’
என்பது.
6.
தைத்திரீய ஆனந். 9 :
1.
7. இருந்து இருந்து’ அடுக்குக்கு,
பாவம் ‘ஒருகால் ஒன்று சொல்லப்புக்கால்’
என்று தொடங்கும் வாக்கியம். பட்டைப்பொதி சோறு
- கமுகம்
பட்டையிலே கட்டின கட்டுச்சோறு. பட்டைப் பொதிசோறு அவிழ்க்க
வேண்டுங்காணும்’ என்றது,
‘நடுவே நடுவே பகவத் ஸ்மரணத்தாலே
இளைப்பாற வேண்டும்,’ என்பது கருத்து.
|