|
New Page 1
டைய அழகு முதலானவற்றை
அனுபவிக்கப்புக்க இடத்தில் விளாக்குலை கொண்டு அனுபவிக்கக் கூடியனவாக அவையில்லை; பெருவிடாய்ப்பட்டவன்,
சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, வியாதியினாலே வாய் மூடப்பட்டால் அதனைக்
குடிக்க முடியாது துடிக்குமாறு போன்று, விஷயமும் அண்மையிலிருந்து விடாயும் மிக்கிருக்கச்செய்தே,
அளவிற்கு உட்படாத விஷய மாகையாலே பரிச்சேதித்து அனுபவிக்கவொண்ணாதொழிய நோவுபடுகிறார்.
ஆயின், ‘பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேணும் என்று வேண்டுவான் என்?’ எனின்,
‘இவ்வாறு அனுபவிக்கவொண்ணாதொழிந்தது இறைவனுடைய வைலக்ஷண்யத்தாலே வந்தது’ என்று அறிய மாட்டாது,
தம்முடைய கரணங்களின் குறைவு காரணமாக வந்தது என்று அநுசத்தித்து. ‘இறைவன் தான் முதலிலே இத்தைக்
கழித்துத் தன்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக 1உலகத்தைப் படைத்தான்; படைக்கப்பட்ட
உலகத்திலே தான் வந்து அவதரித்தான்; அதற்குமேல் அந்தர்யாமி யுருவமாய் நின்று சத்து ஆதிகளை
நிர்வஹித்தான்; அவன் இப்படி உபகாரங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு வர, நான் அவற்றையெல்லாம்
அசத்துக்குச் சமமாக்கிக்கொண்டேன்; இனி, நான் அவனைக் கிட்டுகை என்று ஒன்று உண்டோ?’ என்று
எல்லையற்ற துக்க சாகரத்தினுள்ளே மூழ்கினவராய், ‘முடிந்தேனேயன்றோ?’ என்று இவர் சோகிக்க,
‘நீர் கரணங்களின் குறைவு காரணமாக வந்தது என்று சோகிக்க வேண்டா; கரண சங்கோசமில்லாதாரும்
நம்மை அனுபவிக்குமிடத்தில்
_______________________________________________
1. இத்திருவாய்மொழியில்
உள்ள ‘முந்நீர் ஞாலம் படைத்த’ என்ற பாசுரத்தைக்
கடாக்ஷித்து, ‘உலகத்தைப் படைத்தான்’ என்கிறார்.
‘எம் வாமன’ என்ற
பகுதியைக் கடாக்ஷித்து, ‘அவதரித்தான்’ என்கிறார். ‘எங்கணும் நிறைந்த
எந்தாய்’
என்ற பகுதியைக் கடாக்ஷித்து, ‘அந்தர்யாமி யுருவமாக’ என்கிறார்.
‘ஆக்கையின் வழி உழல்வேன்’
என்றதனைக் கடாக்ஷித்து, ‘அசத்துக்குச்
சமமாக்கிக்கொண்டேன்’ என்கிறார். ‘எங்கினித் தலைப்பெய்வன்?’
என்றதனை நோக்கி, ‘இவர் சோகிக்க’ என்கிறார். ‘சிந்து பூ மகிழும்’
என்றதனைக் கடாக்ஷித்து,
‘இப்படியேகாணும் படுவது’ என்று
அருளிச்செய்கிறார். ‘நிலை பெற்று என் நெஞ்சம்’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றிச் ‘சமாதானத்தை அடைந்தவராய்த் தலைக்கட்டுகிறார்’ என்கிறார்.
|