|
என
என் நா - 1இவர்கள்
யாருக்கு உரிமைப்பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடையது,’ என்கிறபடியே, நான் அவனுக்கு
அடிமை ஆகையாலே, எனக்குக் காரணமாய் அவனுக்கு அடிமை ஆன என் நா. 2‘வஞ்சனே என்னும்
எப்போதும் என் வாசகமே’ என்னும்படியான நா ஆதலின், ‘என் நா’ என அதனோடு ஒரு சம்பந்தத்தைக்
கொண்டாடுகிறார். ‘என்னைப் போலே நாவால் காரியம் கொண்டார் உளரோ?’ என்கிறார் என்றபடி.
இன் கவி - 3இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக, அவ்வழியாலே
தமக்கு இனியதாய் இருக்கிறபடி. தலைவனுக்கு இனியதான வழியாலே அன்றோ அடிமையாக உள்ளவனுக்கு இனியதாவது?
‘ஆயின், தொண்டு செய்கிற அடியவனுக்கு இனிமைக்குக் காரணம் உண்டோ?’ எனின், ஆண் பெண் இருவர்
கலவாநின்றால், இரண்டு தலைக்கும் உள்ள இன்பம், சேஷ சேஷிகள் பரிமாற்றத்திலும் உண்டே அன்றோ?
அன்றிக்கே, அவனுக்கு இனியதாய் அவ்வழியாலே தனக்கு இனியதாகை அன்றோ அடியவனாக உள்ளவனுக்கு
வாசி என்னுதல்?
யான் - அவனுக்கே
உரிய அடியவனாய் இருக்கிற யான். 4இதனை நினைத்தே அன்றோ மேல் ‘யஸ்யை தே -
இவர்கள் யாருக்கு உரிமைப்பட்டவர்களோ’ என்றது? ஒருவர்க்கும் கொடுக்கிலேன் - ‘ஒருவர்க்கும்
கொடுக்கிலேன்’ என்னும் இது, மேலே கூறிய அத்தியந்த பாரதந்திரியத்தோடு சேர்ந்ததாய் இல்லையே?
‘புறம்பு ஒருவர்க்கும் கொடேன்’ என்கையாலே, ‘இறைவன் விஷயத்தில் கொடுப்பேன்,’ என்கிறார்
ஆவர்;
____________________________________________________
1.
பாரதம், உத்தியோகபர்வம்.
2.
திருவாய். 3. 8 : 2.
3. ‘ஆழ்வார் தம்முடைய
கவியை ‘இன்கவி’ என்று கூறுதல் ஆமோ?’
என்னும் வினாவிற்கு விடையாக, ‘இவர் கவியை’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
4. ‘மேல் ‘என் நா’
என்றார்; இங்கே ‘யான்’ என்கிறார்; இது, கூறியது கூறல்
ஆகாதோ?’ என்னும் வினாவிற்கு விடையாக,
‘இதனை நினைத்தேயன்றோ’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘’யஸ்யை தே, என்றது, மேல்
‘எனது’
என்னும் செருக்கு அற்றபடியைக் கூறுயது; இங்கு ‘யான்’ என்னும் செருக்கு
அற்றபடியைக் கூறியது
என்றபடி. ‘மேல்’ என்றது, இப்பாசுரத்தில் முன்னுள்ள
‘என் நா’ என்பதற்குப் பொருள் கூறுமிடத்தில்
என்றபடி.
|