முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
325

உளன

    உளன் ஆகவே எண்ணி - 1இலன் ஆகவே அறுதியிட்டு இருக்கிறார் ஆயிற்று இவர். ‘அந்தப் பரம்பொருளைத் தவிரப் பலவகைப்பட்ட பொருள்கள் ஒன்றும் இல்லை,’ என்கிறபடியே, அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒரு பொருள் இல்லை என்று இருக்கும்படியாலே. 2‘நினைக்கின்ற காலத்திலும் அவனை உளன் ஆக நினையாத போது ‘இவனும் இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, தாம் உளர் அன்றிக்கே இருப்பர் அன்றோ? அவனை ‘உளன்’ என்று நினைத்துத் தான் உளனாக வேண்டியிருக்க, அவனை ‘இலன்’ என்று தான் உளனாக விரகு இல்லையே?’ என்றபடி. 3தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ? 4தன்னைக் கட்டிக்கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ, அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?

    ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார், 

____________________________________________________

1. ‘உளனாகவே எண்ணி’ என்று அவன் நினைவினை அருளிச்செய்கையாலே
  அதற்கு மாறுபட்ட இவரது திருவுள்ளத்தை அருளிச்செய்கிறார்,
  ‘இலனாகவே’ என்று தொடங்கி. இவரது திருவுள்ளத்துக்குப் பிரமாணம்
  ‘அந்தப் பரம்பொருளைத் தவிர’ என்று தொடங்குவது. இது, கடவல்லி
  உபநிடதம்,
2. 4 : 11.

2. இலனாகவே நினைப்பதற்கு மீட்டும் ஒரு காரணம் அருளிச்செய்கிறார்,
  ‘நினைக்கின்ற காலத்திலும்’ என்று தொடங்கி. ‘தாம் உளர் அன்றிக்கே
  இருப்பர்’ என்றது, ‘அன்றுநான் பிறந்திலேன்; பிறந்த பின் மறந்திலேன்’
  என்று இருக்குமவராகையாலே, அவர்களையும் அப்படியே நினைத்திருப்பவர்
  இவர் என்றபடி.

3. ‘உளனாகவே எண்ணி’ என்று அருளிச்செய்வது என்? அவன் உள்ளவன்
  அல்லனோ?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், தான்
  உளனாகையாவது’ என்று தொடங்கி.

4. ‘இலனாகவே’ இவர் நினைப்பதற்கு மூன்றாவதாக ஒரு காரணத்தை
  உதாரண மூலம் காட்டுகிறார், ‘தன்னைக் கட்டிக்கொண்டு’ என்று தொடங்கி.
  இது, ஸ்ரீராமா. சுந். 43 : 25. அழிவு அண்மையில் இருப்பதனாலே ‘நேய
  மஸ்தி’ என்று திருவடி சொன்னாற்போன்று, இவரும் இவர்களுடைய
  நிலையாமையைத் திருவுள்ளம் பற்றி, ‘இவர்கள் தங்களை நித்தியராக
  நினைத்திருப்பதே!’ என்கிறார் என்பது கருத்து.