முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
326

New Page 1

‘எண்ணி’ என்கிறார். தன்னை - 1உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்’ என்கிறபடியே, ‘அவன் நமக்கு உளன்காண்’ என்றால் பின்னை அச்சம் அற்றவனாய் மார்விலே கைவைத்து உறங்கலாம்படி இருப்பான் ஒருவனை உளன் என்றுதான் நினைக்கிறானோ? தன்னுடைய உண்மை அவனுடைய உண்மையாலேயாய் இருக்க, அவனை ஒழிய ‘பிரஹ்மத்தை இல்லை என்று அறிகிறானாகில் அவனும் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே, இன்றியே இருக்கிற தன்னை.

    ஒன்றாக - போரப் பொலிய நினைத்து. தன் செல்வத்தை - ‘ஸதி தர்மிணி தர்மா: - தர்மி உண்டானால் தர்மம் இருக்கும்,’ என்கிறபடியே, தான் உண்டானால் அன்றே தர்மம் உண்டாவது? தன்னையே தேடிப்பிடிக்க வேண்டும்படியாயிருக்கத் தனக்கு ஒரு செல்வம் உண்டாக நினைக்கிறான் அன்றோ? வளனா - ‘வளமாக’ என்றபடி. அதாவது, ‘அழகியதாக’ என்னுதல், ‘மேலாக’ என்னுதல். ‘இறைவன் செல்வத்துக்கும் மேலாய் அன்றோ தன் செல்வத்தை நினைத்திருக்கிறான்?’ என்றபடி. மதிக்கும் - தானே இதனைக் குவாலாக மதிக்குமித்தனையே அன்றோ? புறம்பே இதனை ஒன்றாக நினைத்தற்கு இவனைப்போன்ற மாக்கள் இல்லை என்றபடி.

    2
கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட, அவன் பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இதனைக் கேட்டு இவனைப் பெருமைப்படுத்தும்’ என்று அருளிச்செய்ய, அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம்படியே!’ என்ன, ‘ஆ! ஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே? கிராம காரியம் செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான். இம்மானிடத்தை - 3மேலே

____________________________________________________

1. முதல் திருவந். 99.

2. ‘தன்னைத் தானே குவாலாக நினைத்திருக்கும்’ என்பதற்கு ஓர் ஐதிஹ்யம்
  காட்டுகிறார், ‘கல்பிரஹ்மதேசத்திலே’ என்று தொடங்கி. கரிகாற் சோழ
  பிரஹ்மராயன் - மூன்றாம் குலோத்துங்கன் சமஸ்தானத்தில் ஓர்
  உயர்பதவியில் இருந்த ஓர் அந்தணன். இப்பெயர் அவனுக்கு அரசனால்
  கொடுக்கப்பட்ட பட்டப்பெயர். சீயர் - நஞ்சீயர். பிள்ளை - நம்பிள்ளை.

3. ‘மேலே’ என்றது, ‘உளனாகவே எண்ணி’ என்னுமிடத்தைத் திருவுள்ளம்
  பற்றி.