முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
328

தம

தம்மளவோடு முடிவு பெறாமையாலே, ‘என் குலநாதன்’ என்கிறார். ‘எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாக இருப்பவனாய் அடையத் தக்கவனுமான இவனை ஒழிய, குணம் என்பது சிறிதும் இன்றிக்கே மிகச் சிறியருமாய் அடையத் தகாதவருமாய் இருக்கிற மனிதரைக் கவிபாடி என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

(2)

313

        ஒழிவுஒன்று இலாதபல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
        வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்க்
        கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
        இழியக் கருதிஓர் மானிடம் பாடல் என்னாவதே?

   
பொ-ரை : புலவீர்காள்! சிறிதும் இடையீடு இல்லாத பலப்பல ஊழிக்காலமெல்லாம் நிலை நின்று அனுபவிக்கும்படி செல்லுகின்ற வழியைத் தருகின்ற, நம்முடைய வானவர் தலைவனை ஒழிய, புறம்பே சென்று, மிக மிக நல்லவான உயர்ந்த கவிகளைக்கொண்டு உங்களைத் தாழ்வாக நினைத்துச் சிறிய மனிதர்களைப் பாடுதலால் ஆகும் பயன் என்?

    வி-கு :
‘ஒன்று ஒழிவு இல்லாத’ என மாறுக. நங்கள் என்பதில் ‘கள்’ அசை நிலை. ‘கழிய மிக நல்ல வான்’ என்ற அடைமொழிகள் கவியின் உயர்வினைப் புலப்படுத்த வந்தன. ‘ஓர் மானிடம்’ என்றவிடத்து ‘ஓர்’ என்பது சிறுமையைப் புலப்படுத்த வந்தது.

    ஈடு :
மூன்றாம் பாட்டு. 1‘வேறுபட்ட மிக்க சிறப்பினை உடையவனாய் உபகாரகனாய் இருக்குமவனை ஒழிய, அற்ப மனிதரைக் கவி பாடுவதனால் என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

    ஒன்று ஒழிவு இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவ - காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையும் இடைவிடாமல் தங்கும்படி. என்றது, 2’மீண்டும் வருகிறான் இல்லை’ என்கிறபடியே, ‘உயிர் உள்ள காலம் வரையிலும் சரீரத்தின் சம்பந்தம் அற்று வழுவிலா அடிமை செய்கைக்கு’ என்றபடி. காலத்தால் வேறுபாடு இல்லாத தேசத்திலே (பரமபதத்தில்) அனுபவத்தைச் சொல்லாநிற்கச்செய்தேயும், காலம் நடையாடும் தேசத்திலே வாழ்கின்றவர் ஆதலின், ‘பல் ஊழிதோறு ஊழி

____________________________________________________

1. ‘போம் வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்க, ஓர் மானிடம்
  பாடல் என்னாவது?’ என்ற பதங்களைக் கடாக்ஷித்து, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. சாந்தோக். உப. 8 : 15.