|
ந
நிலாவ’
என்று காலத்தை மாட்டேற்றிச்
சொல்லுகிறார். போம் வழியைத் தரும் - 1‘போய் அனுபவிக்குமது அளவிற்கு உட்பட்டது’
என்னும்படி தனக்குமேல் ஒன்று இல்லாததான இனிமையையுடைய அர்ச்சிராதி மார்க்கத்தைத் தரும். அன்றிக்கே,
‘தன்னைக் கிட்டும் வழியைத் தரும்’ என்னுதல்; கிட்டும் வழியைத் தருதலாவது, தானே வழியும் ஆதல்.
அன்றிக்கே, ‘வழி’ என்பது ‘பெறுகிற பேறு’ என்னுதல். ‘பெறுகிற பேறு’ என்னும் போது, தான்
போம் நெறியாய், அதாவது, என்றும் ஒக்கப் பின் சென்று நடக்கையே தன்மையாய், இயற்கையான கைங்கரியத்தைச்
சொல்லுகிறது.
நங்கள் வானவர்
ஈசனை நிற்க - 2‘புணைகொடுக்கிலும் போக ஒட்டார்’ என்கிற பேற்றைக் கவி
பாடினார்க்கு அவன் கொடுத்தாலும், ‘இவன் செய்ததற்கு நாம் செய்தது போருமோ?’ என்று மேன்மேல்
எனக் கொடுப்பிக்குமவர்களை உடையவனை விட்டு. அன்றிக்கே, அவன், ‘இவன் ஒரு சொல் சொல்ல வல்லவனே!’
என்று காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்க என்னுதல். போய்-புறம்பே பாடுகைக்கு விஷயம் தேடிப்
போய். அன்றிக்கே, ‘இவன் கவி பாடி வாராநின்றான்’ என்று கேட்டவாறே கழியப் போம், இவன்
கவி கேட்டு யாதேனும் தான் கொடுக்கவேண்டுமே என்று நினைத்து; இவனும் அவன் புக்க இடம்புக்கு
‘இதனைக் கேட்பித்து ஒன்று பெற்றோமாய்விட வேண்டும்’ என்று தொடர்ந்து போமே. ஆக, அவன்
போக இவன் போகப் போகாநிற்குமித்தனை ஆதலின், ‘போய்’ என்கிறார் என்னுதல்.
3‘ஆஜகாம - வந்தார்’ என்கிற
___________________________________________________
1. ‘போம் வழியைத்
தரும்’ என்பதற்கு மூன்று வகையான பொருள்
அருளிச்செய்கிறார்: ஒன்று, போம் வழி - போகிற அர்ச்சிராதி
மார்க்கம்;
இரண்டு, போம் வழி - கிட்டும் உபாயம்; மூன்று, போம் வழி - நடக்கிற
வழியாய்,
அதாவது, அநுவர்த்தன ஸ்வபாவமாய், இயற்கையான கைங்கரியம்.
2.
பெரியாழ்வார் திருமொழி, 4. 5 : 2.
‘நி்ற்க’
என்பதற்கு இரு வகைப்பொருள்: ஒன்று, நிற்க - ‘அவனை
விட்டு’ என்பது. இரண்டாவது பொருள், நிற்க
- ‘காலத்தை எதிர்
நோக்கினவனாய் இறைவன் நிற்க’ என்பது, இரண்டாவது பொருளில்
‘ஈசனை’ என்பதில்
ஐகாரம், சாரியை இடைச்சொல். ‘நங்கள்’ என்பது
வானவர்க்கு அடைமொழி.
3.
‘இளையபெருமாளோடு கூடின பெருமாள் எங்கு இருப்பாரோ அங்கு ஸ்ரீ
விபீஷணாழ்வான் வந்தார்’ என்பது,
ஸ்ரீராமா. யுத். 17
: 1.
|