|
ப
பாதகமான சோறுதானே அது
கழிந்தவாறே தாரகம் ஆகாநின்றதே? ‘இவர்க்கு இன்னது இன்ன போது தாரகமாம்: இன்னது இன்ன போது
பாதகமாம்’ என்று தெரியாது; குணங்களின் 1ஆவிஷ்காரத்தாலே தரிப்பித்துக்கொண்டு
செல்லுகிற ஈசுவரனுக்கும் தரித்த இவருக்கும் தெரியுமத்தனை இதுதான். 2மற்றும், மக்களுக்கு
மட்டும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிற நீர்மை அங்கு; கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகங்
கொடுத்த நீர்மை உண்டே இங்கு.
234
முந்நீர்ஞா லம்படைத்த
எம்முகில்
வண்ணனே!
அந்நாள் நீ தந்த
ஆக்கையின்
வழிஉழல்வேன்;
வெம்நாள்நோய்
வீய
வினைகளை வேர்அறப்பாய்ந்து
எந்நாள்யான் உன்னை
இனிவந்து
கூடுவனே?
பொ-ரை :
கடல் சூழ்ந்த
உலகத்தை உண்டாக்கின, எனது முகில் போன்ற நிறத்தையுடையவனே! அக்காலத்திலே உன்னால் கொடுக்கப்பட்ட
சரீரத்தினது நல்வினை தீவினைகளின் வழியே திரிகின்ற யான், கொடிய நாளில் பிறவித்துன்பம்
நீங்க, நல்வினை தீவினைகளை அடியோடு அற்றுப்போகும்படி அழித்து, இனி எந்த நாளில் யான் உன்னை
வந்து கூடுவேன்?
_____________________________________________________
1. ஆவிஷ்காரம் -
பிரகாசம்.
2. மூன்றாவது சமாதானத்தை
அருளிச்செய்கிறார், ‘மற்றும்’ என்று தொடங்கி.
அங்கு - அழகர் திருமலை. இங்கு - திருவேங்கடம்.
‘நன்மணி வண்ணனூர்
ஆளியும் கோளரியும்
பொன்மணியும் முத்தமும்
பூமரமும் - பன்மணிநீ
ரோடு பொருதுருளும்
கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்’
என்பது, திருமழிசைப்பிரான்
திருவாக்கு.
|