| ஈ 
    ஈடு : ஏழாம் 
பாட்டு. 1‘வழி பறிக்கும் நிலத்தில் தன்கைப்பொருள்கொண்டு தப்பினவன் மகிழுமாறு 
போன்று, இவர்களைப் போல அன்றிக்கே பகவானை ஒழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் ஆற்றலன் 
அன்றிக்கே ஒழியப் பெற்றேன்,’ என்று பிரீதர் ஆகிறார்.
 சேரும் கொடை 
புகழ் எல்லை இலானை - கொடையாலே சேர்ந்த புகழுக்கு எல்லை இல்லாதவனை. அன்றிக்கே, ‘தகுதியான 
கொடையால் உண்டான புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்னுதல். என்றது, ஒருவன் ஒருவனுக்கு ஒரு பசுவினைக் 
கொடுத்தானாகில், ‘இவனுக்கு இதற்கு அடி என்?’ என்று இருப்பர்கள்; பெருமாள் சிங்காசனமும் 
2ஸ்ரீ சத்ருஞ்சயனும் அகப்படக் கொடுத்து வெறுவியராய் நின்ற அளவிலே திரிஜடன்
வந்து யாசிக்க, ‘சரயூநதி தீரத்துக்கு இவ்வருகுபட்ட பசுக்களை அடையக் கொண்டு போ,’ என்று 
கொடுக்க, ‘பெருமாள் கொடுத்தாராகில் சேரும்’ என்றார்கள் அன்றோ? அப்படியே, ‘தகுதியான 
கொடையால் வந்த புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்றபடி.
 
 ஓர் ஆயிரம் 
பேரும் உடைய பிரானை - 3கவி பாடுமிடத்தில் ஒன்று இரண்டு பேராய், அவைதாமும் 
‘ஐலபில:’ என்றாற்
 
___________________________________________________ 
1. இப்படி உபதேசித்தும் 
அவர்கள் திருந்தாமையாலே, ஸ்வ லாபஅநுசந்தானத்தால் பிரீதரானபடியைத் திருஷ்டாந்த மூலம் 
அருளிச்செய்யா
 நின்றுகொண்டு, ‘பிரானை அல்லால் மற்று யான் கிலேன்’ என்று
 பதங்களைக் கடாக்ஷித்து 
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
 
 2. ஸ்ரீ சத்ருஞ்சயன் 
- ஸ்ரீ ராமபிரானுடைய பட்டத்து யானை.
 
 3. ‘கவி பாடுமிடத்தில் 
ஒன்றிரண்டு பேராய், அதுதானும் ‘ஐலபில:’
 என்றாற்போலேயாய்’ என்னும் இவ்விடத்தில்,
 
 ‘மூவர் கோவையும் 
மூவிளங் கோவையும்
 பாடிய என்றன் 
பனுவல் வாயால்
 ‘எம்மையும் பாடுக’ 
என்றனிர்; நும்மை
 யாங்ஙனம் பாடுகன் 
யானே?
 களிறுபடு செங்களம் 
கண்ணிற் காணீர்;
 வெளிறுபடு நல்யாழ் 
விரும்பிக் கேளீர்;
 புலவர் 
வாய்ச்சொல் புலம்பலுக்கு இரங்கீர்:
 இலவ வாய்ச்சியர் 
இளமுலை தோயீர்;
 உடீஇர், உண்ணீர், 
கொடீஇர், கொள்ளீர்;
 ஒவ்வாக் கானத் துயர்மரம் 
பழுத்த
 துவ்வாக் கனியெனத் 
தோன்றினிர் நீரே.’
 
 என்ற செய்யுளை ஒப்பு நோக்கலாகும்.
 |