முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
346

என

என்னில், ‘சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவி பாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதினின்றும் தப்பப்பெற்றேன்,’ என்கிறார்.

(8)

319

        வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
        ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப் பிரான்எனக் கேஉளன்;
        சாய்கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
        நீகண்டு கொள்என்று வீடும் தரும்நின்று நின்றே.

   
பொ-ரை : ‘வாயால் மனிதர்களைப் பாட வந்த புலவன் யான் அல்லேன்; ஆராயப்பட்ட குணங்களைக் கொண்ட வள்ளலாகிய ஆழிப்பிரான் எனக்கே இருக்கின்றான்; ஒளியையுடைய இவ்வுலகத்தில் இன்பத்தையும் கொடுத்து, பரமபதத்தையும் நீ கண்டு கொள்வாய் என்று கைங்கரிய சுகத்தையும் முறையாகக் கொடுப்பான்,’ என்கிறார்.

    வி-கு :
கவியேன் - கவியைப் பாடுகிறவன்; புலவன். ‘ஆய் சீர் கொண்ட’ என் மாறுக. ‘சாய்’ என்பது, ‘சாயை’ என்பதன் திரிவு; சாயை - ஒளி. ‘வீடு’ என்பது, ஈண்டு ஆகுபெயராய்க் கைங்கரியத்தைக் காட்டிற்று. ‘நின்று நின்று தரும்,’ என மாறுக.

    ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1‘பெருவள்ளல் ஆனவன் என் கவிக்குத் தன்னை விஷயமாக்கி வைத்த பின்பு, மற்றையோரைத் துதித்தற்கு அதிகாரி அல்லேன்,’ என்கிறார்.

    வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் - 2வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர். அவன் தன்னை

___________________________________________________

1. ‘ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன்; ஆன
  பின்னர், வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்,’ என்று
  கூட்டி அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. பாடுவது வாயைக்கொண்டேயாய் இருக்க, ‘வாய்கொண்டு’ என்று
  விசேடித்ததற்கு ரசோக்தியாக பாவம் அருளிச்செய்கிறார், ‘வாய் வந்தபடி’
  என்று தொடங்கி. இது சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக வாயினைப்
  படைத்தபடியே’ என்பது நேர்ப்பொருள்; சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக
  வாயினைப் பெற்று என்பது வேறும் ஒரு பொருள். இறைவனைத்
  துதிப்பதற்காகவே ‘நா’ படைக்கப்பட்டது என்பதனை.

  ‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
  கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
  தொடர்ந்துஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
  நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே?
  நாராய ணாஎன்னா நாஎன்ன நாவே?’

(சிலப். ஆய்ச். குர.)

  என்பதனான் உணரலாகும்.