முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
347

ஏத

ஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், 2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்; 

____________________________________________________

1. ‘இறைவனைத் துதிப்பதற்காகக் கொடுத்த நாவைக்கொண்டு பிறரைக் கவி
  பாடினால் என்?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நான் பிறரை’
  என்று தொடங்கி.

2. ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்

3. ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா
  அருளிச்செய்த பொருள் பின் வருமாறு: ‘ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
  - ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற
  எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’
  என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று
  அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்
  வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை
  அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே
  ராமே - ஸ்வநுரக்த: - உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு
  நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று
  உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை
  செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே - ‘கருமுகை
  மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம்
  பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்
  புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு
  நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை
  வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்
  தாரீர்’ என்றுமாம். ராமே - நடக்கை மிகையாம்படி, வெறுமனே
  இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
  மாகார்ஷீ: - ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)
 
என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
  தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
  இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
  பிராதரி கச்சதி - அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே
  கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
  அக்ரத: ப்ரயயௌ - (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப்
  பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி.’ இப்பாசுரம், பெரியாழ்வார்
  திருமொழி, 3. 6 : 4.