|
உடன
உடன் பிறந்தவனான ஸ்ரீ
ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள் இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை.
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன் - ‘நீர் ‘அவனைக் கவி பாடக் கடவேன்’
என்று இருந்தாலும், 1‘அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வாக்குகள் பேச முடியாமல்
திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, ‘வேதங்களும் பேச முடியாமல் மீளும்படியான பரமன் அன்றோ அவன்?
அவனைக் கவி பாடப் போமோ?’ என்ன, ‘அவன், 2‘பக்தாநாம் - பத்தர்களுக்காகவே’
என்கிறபடியே, தன்னை எனக்கு ஆக்கிவைத்தான்; எனக்குக் கவி பாடக் குறை என்?’ என்கிறார்.
ஆய் கொண்ட சீர்
- ஆராயப்பட்ட சீர். என்றது, குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாக இருக்கிற கல்யாண குணங்கள்.
வள்ளல் - பரம உதாரன். ஆழிப்பிரான் - 3இக்குணங்களைக் காத்து ஊட்ட வல்ல
கருவியை உடையவன். எனக்கே உளன் - என் கவிக்கே தன்னை விஷயம் ஆக்கினான். ஆழிப்பிரான் -
4தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான்.
5‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை, மலக்கு நா உடையேற்கு
மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.
சாய்கொண்ட இம்மையும்
சாதித்து - ஒளியையுடைத்தான இவ்வுலக சுகத்தையும் தந்து. சாய் - ஒளி. கொள். கொள்கை - உடைத்தாகை.
மோக்ஷசுகத்திலும் நன்றாம்படி இவ்வுலகத்திலே தன் அனுபவமே வாழ்க்கையாம்படி செய்து தந்தான் ஆதலின்,
‘சாய் கொண்ட இம்மை’ என்கிறார். இவ்வுலக இன்பங்களோடு மேலுள்ளவற்றோடு வாசியற
அவனே சாதனமாக இவர் பெறுபவராதலின் ‘இம்மையும் சாதித்து’ என்கிறார். வானவர் நாட்
____________________________________________________
1.
தைத்திரீய ஆனந். 9 : 1.
2.
ஜிதந்தா
3. ‘ஆய் கொண்ட சீர்
ஆழிப்பிரான்’ என்று கொண்டு கூட்டி, பாவம்
‘இக்குணங்களை’ என்று தொடங்கும் வாக்கியம்.
4. ‘ஆழிப்பிரான் எனக்கே உளன்’ என மேலே கொண்டு கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார், ‘தானும் தன் ஆயுதமும்’ என்று
தொடங்கி.
5. ‘அப்படிப்
பாடினாரோ?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘வலக்கை ஆழி’ என்று தொடங்கி. இது,
திருவாய். 6. 4 : 9.
இப்பாசுரத்தில்
‘மலக்கு நாவுடையேன்’ என்பதிலே நோக்கு.
|