|
வ
வி-கு :
‘படைத்த வண்ணன்’ என்க. உழல்வேன் - வினையாலணையும் பெயர். ‘வீயப் பாய்ந்து வந்து
கூடுவன்’ எனக் கூட்டுக.
இத்திருவாய்மொழி
நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.
ஈடு : முதற்பாட்டில்,
1‘உலகத்தைப் படைத்து, உன்னை வழிபடுகைக்கு உறுப்பாகக் கரண களேபரங்களைக்
கொடுத்துவிட்டாய் நீ; நான் அவற்றை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கெட்டுப்போனேன்;
இங்ஙனமிருக்கிற நான் உன்னை வந்து கிட்டுவதொரு நாள் சொல்ல வேண்டும்,’ என்கிறார்.
முந்நீர் -
2ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூன்று நீரையுடையதாதலின் ‘முந்நீர்’ எனப்பட்டது.
இனி, 3‘இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே, முதன்முன்னர்த்
தண்ணீரைப் படைத்துப் பின்னரே அண்டத்தைப் படைத்தானாதலின், 4முன்னே படைத்த
நீர் என்னுதல். ஞாலம்
________________________________________________
1. முதல் அடியையும், ‘எந்நாள்
யான் உன்னை இனி வந்து கூடுவனே?’
என்பதனையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். இந்த
அவதாரிகை, எம்பெருமானார் நிர்வாகத்தைப் பின் பற்றியது. களேபரம் -
உடல். பிராவண்யம் -
ஈடுபாடு.
2. ‘யாற்று நீரும்
ஊற்று நீரும் மழைநீருமுடைமையால், கடற்கு முந்நீர் என்பது
பெயராயிற்று; அன்றி, ‘முன்னீர்’ என்றோதி
நிலத்திற்கு முன்னாகிய நீர்
என்றும் உரைப்ப,’ என்பர் புறநானூற்று உரையாசிரியர். (புறம். 9)
‘முந்நீர் - கடல்; ஆகுபெயர்; ஆற்று நீர். ஊற்று நீர், மேனீர் என இவை’
என்பார்க்கு,
‘அற்றன்று; ஆற்றுநீர் மேனீர் ஆதலானும், இவ்விரண்டும்
இல்வழி ஊற்று நீரும் இன்றாமாதலானும்,
இவற்றை முந்நீர் என்றல்
பொருந்தியது அன்று; ‘முதிய நீர்’ எனின் ‘நெடுங்கடலும் தன்னீர்மை
குன்றும்’ என்பதனால், அதுவும் மேனீர் இன்றி அமையாமையின் ஆகாது;
‘ஆனால், முந்நீர்க்கும்
பொருள் யாதோ?’ எனின், முச்செய்கையையுடைய
நீர் முந்நீர் என்பது; முச்செய்கையாவன - மண்ணைப்
படைத்தலும்
மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்,’ என்பர், அடியார்க்கு
நல்லார். நச்சினார்க்கினியரும்
இக்கருத்தினரேயாவர்.
3. மனு ஸ்மிருதி,
1 : 8.
4. இப்பொருளுக்கு,
‘முன்னீர்’ என்று பாடமிருத்தல் வேண்டும்.
|