|
எனக
எனக்கு என்ன பயன்?’
என்றார் பெருமாள். என்று - இப்படி அன்போடே சொல்லி. வீடும் தரும் - 1கைங்கரிய
சுகத்தைத் தரும். ‘முக்தி: மோக்ஷோ மஹாநந்தா:’ என்பது நிகண்டு.
நின்று நின்றே -
2‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’
என்று 3திரௌபதியானவள் நீண்ட தூரத்தில் வசிக்கின்ற என்னை நினைத்துக் ‘கோவிந்தா!’
என்று அழுதாள் என்பது யாது ஒன்று உண்டோ, அது வட்டியின்மேல் வட்டி ஏறின கடன் போலே என்னுடைய
மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே, திருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று
நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள். அன்றியே, ‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’
என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு ஒரு தேச
விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம். அன்றியே,
‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய
சுகத்தையும் தருமிடத்தில், பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.
(9)
320
நின்றுநின்று பலநாள்
உய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்ச்
சென்றுசென் றாகிலும்
கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றிஒன்றி உலகம்
படைத்தான் கவிஆயி னேற்கு
என்றும்என் றும்இனி மற்றொரு
வர்கவி ஏற்குமே?
பொ-ரை : ‘காலமுள்ள
வரையிலும் இடைவிடாதே நின்று இன்ப துன்பங்களை அனுபவிக்கின்ற இச்சரீரத்தை நீங்கிச் சென்று,
பல காலம் கழிந்த பின்னராயினும் நம்மைக் கண்டு பிறப்பினை
____________________________________________________
1. ‘வீடு’ என்பது,
ஆகுபெயரால் கைங்கரிய சுகத்தைக் காட்டுகிறது. வீடு
என்பது சுகத்தைக் காட்டுவதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘முக்தி
மோக்ஷோ மஹாநந்த:’ என்று.
2. ‘நின்று நின்று’
என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
3. முழுக்கக் கொடுத்தாலும்
‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று இறைவன்
இருப்பதற்கு மேற்கோள், ‘திரௌபதியானவள்’
என்று தொடங்கும்
பொருளையுடைய சுலோகம். இது,
பாரதம் உத், 58 : 22.
|