|
இவர
இவர்கள் நீக்க வேண்டும்
என்று நினைத்துப் படைக்குந்தோறும் பொருந்தி உலகத்தைப் படைத்தவனுடைய கவியான எனக்குக் காலம்
உள்ள வரையிலும் மற்று ஒருவரைக் கவி பாடுகை தகுமோ?’ என்கிறார்.
வி-கு :
‘சென்று சென்றாகிலும் கண்டு, நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,
சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’ எனக் கூட்டுக. கண்டு
நீங்கிப் போய்ச் சன்மம் கழித்தல், சேதனர் தொழில். எண்ணுதல், இறைவன் தொழில். ‘எண்ணிப்
படைத்தான்’ என்க.
ஈடு : பத்தாம்
பாட்டு. 1‘சர்வேசுவரன் கவியான எனக்குப் பிறரைத் துதிக்கும் உறுப்பு ஏற்றது அன்று,’
என்கிறார்.
பல நாள் நின்று
நின்று - பல காலம் 2இடைவிடாதே. உய்க்கும் - செலுத்தும். என்றது, ‘இவ்வாத்துமாவுக்கு
விரோதமாக நடத்தும்’ என்றபடி. இவ்வுடல் - 3கூற்றம் கண்டாற் போன்று அச்சத்திற்குக்
காரணமாய் இருக்கிறபடி. 4‘இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற
சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார். ‘முன்புள்ள சரீரங்களையும்
‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில், முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே
இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு.
நீங்கிப் போய்
- விட்டுப் போய். சென்று சென்றாகிலும் - ஒன்று அல்லா ஒரு பிறவியிலேயாகிலும். கண்டு - நம்மை
இவன் கண்டு. சன்மம் கழிப்பான் எண்ணி - பிறவியின் சம்பந்தம் அறும்படி செய்ய வேண்டும் என்று
நினைத்து. அன்றிக்கே, ‘சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி’ என்பதற்கு,
‘நெடுங்காலம் கூடவாகிலும் நம்மை அறிந்து இவை பிறவிகளிற் புகாதபடி பண்ணவேண்டும் என்று சிந்தித்து’
என்று பொருள் கூறலுமாம். இப்பொருளுக்கு, ‘சென்றுசென்றாகிலும்’ என்பதனை
____________________________________________________
1. ‘உலகம் படைத்தான்
கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’
என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘நின்று நின்று’
என்ற அடுக்குத்தொடரால், நாள்தோறும் ஒரு கணநேரமும்
விச்சேதம் இல்லை என்று தோன்றுகிறது.
3. ‘இ’ என்று
சுட்டுக்கு, பாவம் அருளிச்செய்கிறார், ‘கூற்றம் கண்டாற்போன்று’
என்று தொடங்கி.
4. ‘இவ்வுடல்’ என
ஒருமையாய் இருப்பினும், உபலக்ஷணத்தால் முன் சென்ற
சரீரங்களையும் கோடல் வேண்டும்’ என்பது
கருத்து.
|