முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
352

ஒரு சொல் நீர்மையதாகக் கொள்க. ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் - 1‘சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா’ என்கிறபடியே, ஒருகால் படைத்துப் பலியாவிட்டால் சோம்பிக் கைவாங்காதே ஒருப்பட்டு ஒருப்பட்டு உலகங்களைப் படைத்தவனுடைய; கிருஷிகன் ஒருகால் பயிர் செய்து, பதர்த்தால் பின்பும் பயிர்தன்னையே செய்யுமாறு போன்று, இவனும் ‘ஒருநாள் அல்லா ஒரு நாளாலும் ஆம்’ என்றே அன்றோ படைப்பது?

    ‘இறைவனைக் கிருஷிகனாகவும், உலகத்தை வயலாகவும் கூறலாமோ?’ எனின், 2‘பத்தி உழவன் பழம்புனமே’ அன்றோ இது? 3ஒரு நாள் அல்லா ஒரு நாளாகிலும் நம்மை அறிந்து, பல நாளும் இடைவிடாதே இவ்வாத்துமாவுக்கு விரோதமாக நடத்துகிற இச்சரீரத்தை விட்டுப்போய், இனி இவ்வாத்துமாக்கள் பிறவாதபடி பண்ண வேண்டும் என்று நினைத்து ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் ஆயிற்று. உலகம் படைத்தான் கவி ஆயினே்ற்கு - 4அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷிபலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு. என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே - காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?

    ‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில், பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவுதானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ? ஒரு நாளிலேயே பலிக்குமது

____________________________________________________

1. பெரிய திருவந். 18.

2. நான்முகன் திருவந். 23.

3. ‘சென்று சென்றாகிலும் கண்டு, நின்று நின்று பல நாள் உய்க்கும்
  இவ்வுடல் நீங்கிப் போய், சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி
  உலகம் படைத்தான்,’ என்று கொண்டு கூட்டிப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘ஒரு நாள் அல்லா ஒரு நாளாகிலும்’ என்று
  தொடங்கி.

4. ‘கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு
  வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
  பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும்
  புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
  ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று
  தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
  அருளிச்செய்கிறார்.