|
என
என்பது இன்றே? ஆகையால்,
பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும்
இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் 1‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’
என்றும், 2‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு
வேறுபட்டிருக்கிற பொருள்களைப்பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம். 3‘வேறு
சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல்
தகுமோ?’ என்னுதல்.
(10)
321
ஏற்கும் பெரும்புகழ் வானவர்
ஈசன்கண் ணன்றனக்கு
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு
கூர்ச்சட கோபன்சொல்
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்
துள்இவை யும்ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ்
சொல்லவல் லார்க்குஇல்லை சன்மமே.
பொ-ரை : ‘தகுதியான
பெரும்புகழையுடைய வானவர் ஈசனான கண்ணன் விஷயமாக, தகுதியான பெரிய புகழையுடைய வளப்பம் பொருந்திய
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த தகுதியான பெரிய புகழையுடைய ஆயிரம்
பாசுரங்
_____________________________________________________
இரண்டாவது பொருள்,
‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு
வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில்
‘கவி’ என்பது,
பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே,
‘பலவாக உள்ள
காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை
போருமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.
1.
தைத்திரீய. பிரு.
10.
2. ‘நான் பரமாத்துமாவுக்கு
இனியன்; நான் இனியனாகிற பரமாத்துமாவை
அனுபவிக்கிறவன்,’ என்பது இவ்வுபநிடதத்தின் பொருள்.
இது,
தைத்திரீயம்.
3. ‘வேறு சிலர்க்கு நான்
கவியாகத் தகுமோ?’ என்றது, ‘கவி ஆயினேற்கு’
என்றதற்குக் கூறிய இரு வகைப் பொருள்களில் முதற்பொருளை
விளக்க
வந்தது. ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்றது, ‘வேறு
புலவர்கள் கவிகளைக்
கேட்டுச் சம்பாவிக்கத் தகுமோ?’ என்றபடி.
|