|
களுள
களுள் தகுதியான பெரிய
புகழையுடைய ஒப்பற்ற இப்பத்துப் பாசுரங்களையும் சொல்ல வல்லவர்கட்குப் பிறவி இல்லை,’ என்றபடி.
வி-கு :
‘ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் ஏற்கும் பெரும் புகழ் ஓர் இவை பத்தும்’ எனக் கூட்டுக.
ஈடு :
முடிவில், 1‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தைக் கற்றவர்கட்கு, பிறரைக்
கவி பாடத் தகுதியான பிறவி இல்லை,’ என்கிறார்.
ஏற்கும்
பெரும்புகழ் வானவர் ஈசன் கண்ணன்தனக்கு - தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு
நிர்வாஹகனாய், அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலே பரத்துவத்தையுடையவன்
தனக்கு. ‘மனிதத் தன்மையில் பரத்துவம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின், ஸ்ரீ கீதையில்
ஒன்பதாம் ஓத்திலே நின்று மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசாநின்றதே அன்றோ?
ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் - ‘அவன் உபய விபூதிகளையுடையவன்’ என்றால்,
தக்கு இருக்குமாறு போன்று 2சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால் அதற்குப்
போரும்படியிருக்கிற ஆழ்வார் அருளிச்செய்த.
ஏற்கும்
பெரும்புகழ் ஆயிரம் 3‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’
என்னும்படியான பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.
ஏற்கும் பெரும்புகழ் ஓர் இவை பத்தும்-ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும்புகழையுடைத்து. என்றது,
‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்துக்குச் சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,
___________________________________________________
1. ‘இவையும் ஓர்
பத்துச் சொல்ல வல்லார்க்குச் சன்மம் இல்லை,’
என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘தேவிற் சிறந்த
திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவிற் சிறந்த
திருவாய் மொழிபகர் பண்டிதனே:
நாவிற் சிறந்தஅம்
மாறற்குத் தக்கநன் னாவலவன்
பூவிற் சிறந்தஆழ்
வான்கம்ப நாட்டுப் புலமையனே.’
என்பது
சடகோபரந்தாதி,
சிறப்புப்பாயிரம்.
3.
தைத்திரீய ஆனந். 9 : 1.
|