முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
357

New Page 1

சேர்ந்த சேர்த்தியையும் அகடிதகடநாசாமர்த்தியத்தையும் ஆகிய இவற்றை எல்லாம் அனுபவிக்கப்பெற்றேன்; எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

322 

        சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்
             சங்கொடு சக்கரம்வில்
        ஒண்மை யுடைய உலக்கைஒள் வாள்தண்டு
             கொண்டுபுள் ஊர்ந்துஉலகில்
        வன்மை உடைய அரக்கர் அசுரரை
             மாளப் படைபொருத
        நன்மை உடையவன் சீர்பர வப்பெற்ற
             நான்ஓர் குறைவுஇலனே.

   
பொ-ரை : ‘பல பல பிறவிகளை எடுத்துக் கண்களுக்குப் புலனாகி, சங்கம் சக்கரம் வில் ஒளி பொருந்திய உலக்கை ஒளி பொருந்திய வாள் தண்டு இவற்றைக் கையில் தரித்துக்கொண்டு, கருடப்பறவையினை வாகனமாகக் கொண்டு, வலிமை பொருந்திய அரக்கர்களும் அசுரர்களும் படைகளோடு இறக்கும்படி போர் செய்த நன்மையையுடைய சர்வேசுவரனுடைய நற்குணங்களைத் துதிக்கப்பெற்ற நான், ஒரு குறையும் இல்லாதவனேயாவேன்’ என்கிறார்.

    வி-கு :
‘செய்து வெளிப்பட்டுக் கொண்டு பொருத நன்மையுடையவன்’ என்றும், ‘ஊர்ந்து பொருத நன்மையுடையவன்’ என்றும் கூட்டுக. ‘மாளப் பொருத’ என்க. இப்பாசுரத்தில் இறைவனுடைய ஐந்து ஆயுதங்களும் கூறப்பட்டிருத்தல் காணலாம். உலக்கை - பலராமனுக்குரிய படை. இச்செய்யுள் இனவெதுகையாய் அமைந்தது.

    ஈடு :
முதற்பாட்டில், 1இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார்; ‘திவ்விய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியைச் சொல்லப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார். அன்றிக்கே, ‘அடியார்களைக் காத்தற்பொருட்டு பல அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற எம்பெருமானுடை நற்குணங்

____________________________________________________

1. ‘இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற பொருளை’ என்றது, ‘பகவானைத்
  துதி செய்தற்குத் தகுதியான உறுப்புகளையுடையராகப் பெறுகையாலே
  உண்டான உவகையராதல் ஆகிற பொருளை’ என்றபடி. இப்பாசுரத்திற்கு
  நான்கு வகையில் அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘சங்கொடு சக்கரம்
  வில் ஒண்மையுடை உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு சன்மம் பலபல
  செய்து வெளிப்பட்டவன் சீர் பறவப்பெற்ற நான் ஒரு குறைவிலன்,’ என்று
  கொண்டு